சனி, 27 பிப்ரவரி, 2021

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு புதிய குழு! மாநாடு, பொதுக்குழு ரத்து.... (திமுக உத்தேச பட்டியல்)

tamil.indianexpress.com : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.  ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்மே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இதில் அதிமுகவை நிராகரிப்போம் என்றும், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் மார்ச் 7-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தலைமை தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 07.03.2021 இன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டமும், 14.03.2021 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க மாநில மாநாடும் ஒத்திவைகப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து தேர்தல் கூட்டணி தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கழக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்து. இந்த குழுவில், முன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடி, துணைப்பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன்,  அமைப்புச்செயலாளர் எஸ்.ஆர். பாரதி, உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர். எ.வ.வேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு கூட்டணி கட்சிகளுடன், தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: