திங்கள், 12 அக்டோபர், 2020

இலங்கை பெரியார் அமைப்புக்களுக்கு புலி ஆதரவாளர்களின் அச்சுறுத்தல்?

இலங்கையில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு நுவரெலியா ஆகிய இடங்களில் பெரியார் வாசகர் வட்டங்கள் தற்போது ஓரளவு செயல்படுகிறது. இதற்கு இலங்கை அரசிடமிருந்தோ சிங்கள மக்களிடமோ இருந்த்து எதிர்ப்பு எதுவும் வரவில்லை. ஆனால் புலி ஆதரவாளர்களிடமிருந்தும் தமிழ் தேசியர்களிடம் இருந்தும்  பெரிதாக எதிர்ப்பு எழுந்திருப்பதாக தெரிகிறது.  

இன்று இலங்கையில் பெரியார் என்ற பெயரை கேட்டதும் பொங்கி எழுந்து இந்த  கூட்டம் சாமியாடுகிறது . இவர்கள் யார்? 

புலிகளின் மிரட்டல்
இவர்களை இப்படி உருவாக்கியது யார்? ஏனிப்படி இவர்கள் வெறும் படிக்காத தற்குறிகள் ஆகிவிட்டனர்?   முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போராட்ட காலங்களில் இந்த கூட்டம் அதாவது முன்னாள் புலி கூட்டம்    தமிழகத்து பெரியார் அமைப்புக்களால் அளவு கடந்த ஆதரவை உதவிகளை பெற்றவர்கள் . பெரியார் இயக்க தொண்டர்களோடு தலைவர்களோடு குடும்ப உறவினனர்களை விட நெருக்கமாக இருந்து வாழ்ந்தவர்கள்.  பெரியார் அமைப்புக்கள் புலிகளுக்கு அதிக அளவில் உதவிகள் செய்தவர்கள். அந்த பெரியார் அமைப்புக்கள் புலிகளுக்கு ஏன் பெரியார் கருத்துக்களையோ திராவிட கருத்தியல்களையோ சொல்லி கொடுக்கவில்லை? 

இதில் என்ன அரசியல் தந்திரம் உள்ளது என்பதை அத்தனை புலி ஆதரவு பெரியார் அமைப்புக்களும் வெளிப்படையாக கூறவேண்டும். இந்த கேள்வியை அவர்கள் இலகுவில் கடந்து போவது  பெரியாருக்கு இவர்கள் செய்யும் துரோகமாகும் . இவர்கள்  புலிகளுக்கு விழுந்து உதவி செய்தனர் . புலிகள் செய்த அத்தனை அக்கிரமங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தனர் . ஜூனியர் விகடனை விட மோசமாக முட்டு கொடுத்தனர்  . புலிகள் அரசியல் சிந்தனையோ உலக அறிவோ சிறிதும் அற்ற ஒரு கூட்டமாக , இன்னொரு ஆர் எஸ் எஸ் அமைப்பின் பாணியில் உருவாக்கி பூதாகரமாக வளர்ந்து வந்தது .

அதன் பாசிசத்தை வீரம் தீரம் தியாகம் என்றெல்லாம் போற்றி பாடடி பெண்ணே என்ற ரீதியில் நெடுமாறன் வைகோ திருமவோடு போட்டி போட்டுகொண்டு பெரியார் அமைப்புக்களும் துதி பாடினார்கள் . இவர்கள் எல்லோருக்கும் ஊடக வெளிச்சம் கொடுக்க பார்ப்பன பத்திரிகைகள் எல்லாம் எப்போதும் தயார் நிலையிலேயே இருந்தன. இவை எல்லாம் போதாதென்று எம்ஜியார் ஜெயலலிதா சசிகலா நடராஜன் போன்றோர்கள் திமுகவுக்கு ஒரு சரியான எதிரி கிடைத்தான் என்று புலிகளுக்கு பால் ஊற்றினார்கள்.  

இந்த அக்கிரமங்கள் முடிவு ... புலிகளால் இலங்கையில் கொடூரங்கள் அரங்கேறியது . அந்தகொடூரங்களையே வீரம் என்று போற்றியது இந்த கூட்டம்.  இந்த புலி பஜனை கூட்டத்தில் பணம் சம்பாதித்து ஒரு கூடடம் ..  தமிழகத்தில் அரசியல் வெளிச்சம் பெற்றது இன்னொரு கூட்டம்.

இவர்களை எல்லாம் விடுதலை விரும்பிகள் என்று நம்பி வாழ்வை தொலைத்தது ஒரு அப்பாவி மக்கள் கூட்டம்.

இன்று இலங்கையிலும் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மும்பாயிலும் கூட புலிகளுக்கு உதவ போய் வாழ்வை தொலைத்த மக்கள் ஏராளம் இன்னும் மௌனிகளாக அழுதுகொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர் தேசமெங்கும் புலி வியாபாரத்தில் கோடீஸ்வரர்களாக பெரும் கூட்டம் ஒன்று உலாவருகிறது . இந்த கூட்டத்திற்கு புலி என்ற சொல் பணம் கொழுக்கும் சொல் .  அந்த சொல் காலாவதியானதை  ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் இன்றும் சவடால் முயற்சிகளை செய்து பார்க்கிறது.

இலங்கையில் தப்பி தவறியும் மக்கள் மகிழ்ச்சியாக இருந்து விட கூடாது என்பது ஒன்றே இந்த புல்லர்களின் ஒரே நோக்கம் . 

மக்கள் வீதிகளில் தெருத்தெருவாக பதறி அடித்த்து கொண்டு ஓடவேண்டும் அதில் தங்களின் ரவுடிசம் உலகம் முழுவதும் பேசுபொருளாகவேண்டும் . அதை கொண்டு கோடிகளை  அள்ளவேண்டும். இது தான் இவர்களின் நோக்கம்.

இவர்களின் பணம்தான் இன்று தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள தேமிழ்  தேசியர்களின் ஒரே நோக்கம். 

இவர்களுக்கு கருத்தியல் ரீதியாக ஒன்றும் புரியவைக்க முடியாது . அடிப்படை அறிவே அற்ற இவர்களுக்கு எதையும் புரியவைக்க முடியாது.

இவர்களுக்கு சீமான் நெடுமாறன் திருமா மணியரசன் போன்றோரின் புலி பஜனை மட்டுமே இனிக்கும் . அது ஒன்றே புரியும் . அதை தாண்டி அங்கே ஒன்றுமில்லை .

1 கருத்து:

Unknown சொன்னது…

பெரியாரின் பெயரில் பிற்போக்காக புலிகள் பற்றி பேசுகிறீர்கள் புலிகள் முற்போக்கான அரசியலை நடைமுறை படுத்தியவர்கள்.