வெள்ளி, 16 அக்டோபர், 2020

கிண்டில் திமுக, எழுத்தாளர் திமுக, Tvதிமுக, இண்டலெக்ட்சுவல் திமுக, இதழியல் திமுக, திமுக பதிவர் திமுக, பாலோயர் திமுக என பிரிந்து

திமுக என்பதே ஒரு குடும்பம், திமுக குடும்பக்கட்சி என்பதை மறந்துவிட்டு பயணிக்கின்றோமா? கிண்டில் திமுக, எழுத்தாளர் திமுக, Tvதிமுக, இண்டலெக்ட்சுவல் திமுக, இதழியல் திமுக, திமுக பதிவர் திமுக, பாலோயர் திமுக என பிரிந்து கிடப்பதை யாரும் மறுக்க முடியாது. சிலரை தன் டைம்லைனுக்கு வெளியே பார்க்கவே முடியல 

Narasimman Naresh ; · இப்படி இருந்த திமுக இணையம் எப்படி ஆகிவிட்டது? வருத்தத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு. சமூகநீதி சார்ந்த, மாநில சுயாட்சி சார்ந்த பொதுப்பிரச்சனைகள் பல இருக்கும் போது இதை எழுதனுமா என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. அப்பவே அவசரப்படாமல் கொஞ்சமா சிந்தனைக்கு உட்படுத்தி இன்றைக்கு பதிவு செய்றேன் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படம் சொல்லும் விசயம் என்னவெனில்

கோவையில் ஒரு உடன்பிறப்புக்கு பிரச்சனை என்றால் சென்னை அறிவாலயம் வரை அதை கொண்டு போய் சேர்த்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் இணைய உடன்பிறப்புகள். ஆம் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா உடல்நிலை குறித்து எழுதினால் அப்பகுதி அதிமுகவில் புகார் கொடுத்து திமுகவினரை கைது செய்த காரணமாயினர். அந்த நிலையில் ஒரு குழு அமைத்து தளபதி அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஆலோசனையின் படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து, அப்படி கைது செய்யமாட்டோம் என்ற உத்திரவாதத்தை பெற்றோம். ஈரோட்டுல ஒரு திமுககாரனுக்கு பிரச்சனை என்ற உடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் அப்ளை செய்த உடன்பிறப்புகள் அறிவேன்.
திருப்பூர்ல இரத்ததான முகாம் எனில் தமிழகம் முழுக்க உடன்பிறப்புகள் அங்கு சென்று ஆதரவளித்ததும் இந்த உடன்பிறப்புகள் தான்.
மணிகண்டன் மறைவின் போது உலகளாவிய ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதும் இந்த உடன்பிறப்புகள் தான்.
கறுப்பு நிறத்துக்கு அச்சுறுத்தல் வந்த போது திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திராவிட குடும்பமாக
25,000 ப்ரொபைல் படங்கள் கறுப்பு நிறத்தில் காட்சி அளித்து எதிரியை மிரட்டி செய்தியானதும் இங்கே தான்.

உடன்பிறப்புகளின் ஒற்றுமைக்கு இப்படியாக நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை பட்டியலிட முடியும். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. என் பதிவு, என்னை சார்ந்தோரின் பதிவு, என் குழுவினரின் பதிவு என கடந்து செல்கின்றோம். திமுக என்பதே ஒரு குடும்பம், திமுக குடும்பக்கட்சி என்பதை மறந்துவிட்டு பயணிக்கின்றோமா?
கிண்டில் திமுக, எழுத்தாளர் திமுக, Tvதிமுக,
இண்டலெக்ட்சுவல் திமுக, இதழியல் திமுக, திமுக பதிவர் திமுக, பாலோயர் திமுக என பிரிந்து கிடப்பதை யாரும் மறுக்க முடியாது. சிலரை தன் டைம்லைனுக்கு வெளியே பார்க்கவே முடியல. அப்படியே பார்த்தாலும் தனக்கு ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்கு வெளியே வந்தால் தரம் குறைந்துவிடுவதாக கருதுகின்றார்கள். லைக் கமண்ட் போட சொல்லல, நட்பில் இருக்கின்ற அனைவருக்கும் யாராலும் செய்ய இயலாது. ஆனால் எப்போதாவது ஒருமுறை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தனும். படையின் கருவிகளை கூர் திட்ட வேண்டும். இல்லை , மாட்டேன் என்றால் இதுவும் ஒருவித தீண்டாமை தான்.
இப்ப இந்த பதிவை எழுதனுமா என சிந்தித்த வேளையில் இரண்டு பிரச்சனைகள் தான் இப்பதிவை அவசியமாக கருதி எழுத வைத்தது.
கருர்ல நடக்கும் சாதி அரசியலை குறிப்பிட்டு கேட்டதற்காக இலால்பேட்டை பிரபுவிற்கு வரும் மிரட்டல்கள். ஐடி விங்ல இருந்து காரணமே சொல்லாமல் நீக்கம். அதுப்பற்றி அவனும் கவலைப்படல. ஆனால் சாதிரீதியாக கட்சி நடத்தப்படுவதை தான் கண்டிக்கின்றார். தனிமனிதர் செல்வாக்கு உயர்வது கட்சிக்கு பலமாகாது. கட்சிக்கு பலம் சேர்க்கனும்.
இன்னொன்றை சொல்லவே வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கு. தங்கை
Sathya Ananthi
முகநூல் கணக்கு செயல்பாடு தடை செய்யப்பட்டிருக்கு. அவரது பதிவுகள் உங்களை பாதித்து இருந்தால் அதனை ரிப்போர்ட் செய்வதில் தப்பே இல்ல. ரிப்போர்ட் ஆப்சன் உங்க உரிமை. ஆனால் உயிரோடு இருக்கும் அவரது செயல்பாட்டின் மீது பொறாமைப்பட்டு " அவர் இறந்துவிட்டார், அவரது கணக்கை முடக்க வேண்டும் என ரிப்போர்ட் அடிப்பது கேவலமாக தெரியல? மனசான்று அல்லாத அமிர்த்ஷா, மோடி, ஜெயலலிதா போன்ற பாசிஸ்ட்களின் வளர்ப்பா நீங்கள்.
நேற்று அவரது டைம்லைன் முடக்கம் என்பதும் கேலியிம் கிண்டலும் செய்தேன். இதெல்லாம் இங்க இயல்பு தான். ஆனால் அவரது டைம்லைன் சென்று பார்த்த போது அதிர்ந்து போனேன்.
அவர் மரணமடைந்து விட்டார், அவருடனான நிலைவலைகளை Tribute ஆக எழுதுங்கள், குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையும் என்ற பொருட்பட தகவல் காட்டுகின்றது.
திமுககாரனாக வெட்கப்பட்ட நிமிடம் அது.
எல்லாருக்கும் எல்லார் மீதும் அன்பும் அக்கறையும் ஈர்ப்பும் இருக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. அது தவறு. தனிமனித விருப்பு வெறுப்பை மூட்டைக்கட்டி வச்சிட்டு பொது தளத்தில் செயல்படுங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன்.
திமுக என்பது ஒரு குடும்பம். திமுக என்பது குடும்பக்கட்சி என்ற சிந்தனை உடன் செயல்படுவோம்.

கருத்துகள் இல்லை: