திங்கள், 12 அக்டோபர், 2020

புதிய நகைக்கு ஒருவிலை பழைய நகைக்கு ஒருவிலை அது ஏன்?

Subha Chandrasekar : மிகத் தவறான தகவல் என்பதை, ஒரு நகைக்கடைக்காரனாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.     61/2 + 11/2 கி = 8கி என்பது 8125% தங்கம் ஆகும். ஆனால், இவர் குறிப்பிட்டிருக்கும் விலை 916 % க்கு உரியதாகும். ( இந்தக் கணக்கே மிகப் பழைய விலையை அடிப்படையாகக் கொண்டது. )  தவிர, சேதாரம், கூலி பற்றிய தகவல்களும் தவறானவை. 

இப்பொழுது எங்கோ கிடைத்த forward msg ஐ, நுணிப்புல் மேய்ந்து, இங்கே பதிந்துள்ளார். பதிவதற்கு முன், அவருக்கு நம்பகமான நகை தொழில் முனைவோரிடம் விசாரித்தறிந்திருக்கலாம். Rajendra Babu சரி, நீங்கள் உங்கள் கணக்குப்படி 916 ஒரு பவுன் நகை தங்கத்தில் எவ்வளவு தங்கம், எவ்வளவு செம்பு என்று கூறுங்கள்?  

22 காரட் தங்கத்தின் விலையை எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள் என்று கூறுங்கள்? சேதாரம் ஆகும் தங்கத்திற்கு உரிமையாளர் யார்? அதற்கு பணம் வசூலிக்கும் போது அந்த தங்கம் நகை வாங்குபவர்களுக்கு தானே சேரும். நீங்கள் தங்கம் ஏன் தருவதில்லை? எந்த அடிப்படையில் சேதாரம் கணக்கீடு செய்கிறீர்கள்.

Subha Chandrasekar badge icon :  நண்பரே, 916 என்பதே சதவீதம்தான் அடுத்து, சேதாரம் என்பதின் அர்த்தம் என்ன ? வீணாய் போவது ! அதற்கு யார் உரிமையாளராக இருக்க முடியும் ? அதை எடுத்து எப்படி தர முடியும் ? அதில் கூடக்குறையப் போட்டு இலாபம் பார்ப்பது என்பது வேறு. ஆனால், சேதாரம் என்றால், சேதாரம்தான் ! கற்பனையில் எதையும் படைக்க முடியாது. தங்கத்தை விடுங்கள், எந்த ஒரு உருவாக்கமும் சேதாரம் இல்லாமல் முடியாது. நகையின் உருவாக்கத்தின் (design) பொறுத்து சேதாரம் அமைகிறது. 

 Rajendra Babu :  மழுப்பல் 1 பவுன் மோதிரத்திற்கு 15% சேதாரம் என்றால் சுமாராக 1.2 கிராம் தங்கம் ஆகிறது. அவ்வளவு தங்கத்தை வீணாக்கி வேலை செய்கிறீர்களா? முன்னர் முற்றிலும் கையிலேயே நகை செய்தார்கள். முன்னபின்ன சேதாரம் ஆகும். அந்த துண்டுகளை, மீண்டும் பொன் உருக்கும் போது கலந்து விடுவார்கள். ஆனால் தற்சமயம் எல்லாம் இயந்திரங்களைக் கொண்டு செயின், மோதிரம், வளையல்கள் தயாரிக்கும் போது சேதாரம் எப்படி. நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு முற்றிலுமாக  பதில் கூறவில்லை. அடுத்தவர் யாரையேனும் கேட்டு பதிவு இட்டிருக்கலாம் என்று கூறிய நீங்கள், விவரங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை. உங்களது பதில் "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போலத்தான் உள்ளது 

Subha Chandrasekar badge icon:  ஐயா, மனிதமோ, இயந்திரமோ சேதாரம் இல்லாமல் எதுவும் உருப்பெறாது. இதில் மழுப்பல் எதுவும் இல்லை. இதற்கு மேல் எதை மறைத்துள்ளேன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிறிய செய்தி ! உங்கள் வயதுக்கு உங்கள் கண்களில் பட்டிருக்கலாம். பவுன் நகை வேலை செய்யும் பட்டரை வாசலில் உள்ள சாக்கடை மண்ணை எடுத்துச் சென்று, அதிலிருந்து சுத்தம் செய்து பவுன் எடுத்து விற்றுப் பிழைக்கும் ஒரு தொழிலே உள்ளது என்பதை அறிவீர்களா ? இது ஒரு பகுதி, இதுபோல நீரிலே, நிலத்திலே, காற்றிலே என்று பலவாறாக சேதாரம் ஆகாமல் இருக்காது. இதற்கு மேல் தொழில் செய்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அவன் பளபளப்பாக இருக்கிறான் என்றால், பல கோடி முதலீடு போடும் வசதியுள்ளவன், அவனுக்குரிய பவுசாகத்தான் இருப்பான் என்பதை மறந்துவிடக் கூடாது.

 Thambi Arulmoli : புதிய நகைக்கு ஒருவிலை பழைய நகைக்கு ஒருவிலை அது ஏன்? தங்கம் தங்கம்தானே

Subha Chandrasekar badge icon :  i முதல் போடுபவன் எப்படி பிழைப்பது ? அதிகபட்சம் 5% கூட விலை வித்தியாசம் கிடையாது. எந்த வியாபாரத்தில் பழசும், புதுசும் ஒரே விலை ? மோடியிடம் சொல்லி நகைக்கடைக்காரனுக்கெல்லாம் சம்பளம் தரச் சொல்லுங்கள் ! அவ்வளவு என்னங்கையா காண்டு ? 

 Thambi Arulmoli :  பவனுக்கு 3ஆயிரம் 4ஆயிரம் குறைக்கிறாங்க அப்புறம் தங்கத்தில் புள்ளி குறைவுனு சொல்லுறாய்ங்க வாங்கும் போது அதையும் இதையும் சேர்த்தி விலை வச்சு தலைல மிளகாய் அரைக்கிறாங்க அதையே அடுத்த வாரம் விக்கப்போனா அடிமாட்டு விலை மோடிக்கிட்ட சொல்லனுமா?? ஓ.. உங்கிட்ட இவ்வளவு நகை இருக்கானு இருக்கறதையும் புடுங்கவா... 😁😁😁😁 காண்டெல்லாம் ஒன்னுமில்லைங்ய்யா கொரோனா பிரச்சனையில் வருமானம் இல்லை வீட்டு வாடகை உணவுக்கு வழியில்லை நகைகளை விற்க சென்றேன் அப்ப நடந்த சம்பவம் அது

கருத்துகள் இல்லை: