செவ்வாய், 13 அக்டோபர், 2020

கே.வி.தங்கபாலு , பாலகிருஷ்ணன் உடல் நிலை பாதிப்பு விரைவில் நலம் பெற விழைகிறேன்- ஸ்டாலின்!

kathiravan - toptamilnews.com : தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்விருவரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ’காங்கிரஸ் மூத்த தலைவர் நண்பர் கே.வி.தங்கபாலு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதையும் அறிந்தேன். இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.


இருவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன்!    தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலுவுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்து உள்ளார். 

 

thinathanthi :சென்னை, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையே அவரின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இது தொடர்பாக முகநூலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி அறிந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். நலம் பெற்று வருவதாக அவரும் தெரிவித்தார். அவர் நலம் பெற விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கே.வி.தங்கபாலுவிடம், திருநாவுக்கரசர் எம்.பி.யும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்

கருத்துகள் இல்லை: