வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

கன்யாகுமரி .. கும்பல் கொடூர தாக்குதல்... கணவன், மனைவி வெட்டிக்கொலை

தினகரன் : கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் நள்ளிரவில் வீடு புகுந்து அரிவாளால் மர்ம கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில், கணவன் மனைவி உயிரிழந்தனர். மேலும் மகள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் இவர் தோவாளையில் பூக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கல்யாணி,  ராமலெட்சுமி என்ற ஆர்த்தி என்ற மகளும் உள்ளார். நேற்றிரவு 10.30 மணி அளவில் இவரது வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.


தகவலறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த முத்துவும், அவரது மகள் ராமலெட்சுமியும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் முத்து இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ராமலெட்சுமிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் இந்த கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றன

கருத்துகள் இல்லை: