
இந்நிலையில் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறியதாவது: 5 ஆண்டுக்கு முன்னர் இருந்த பாஜக தற்போதுள்ள இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்திற்கு நல்லது செய்ததைவிட தீங்குதான் அதிகம் செய்துள்ளது. அப்படி இருக்கையில் அவர்களுடன் கூட்டணி வைப்பது சரிவராது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பொன்னையன் கூறினார். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக