சனி, 2 பிப்ரவரி, 2019

அமெரிக்காவில் 600 இந்திய மாணவர்கள் கைது... .. போலி விசா


dhinamalar :வாஷிங்டன் : போலி விசா மூலம் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 600  பேர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க, போலி விசாவில் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்ற பெயரில் போலீசாரால் உருவாக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் சேர 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அமெரிக்காவில் உள்ள ஏஜெண்டுகள் சிலர் அந்த பல்கலைக் கழகத்தில் சேர்ப்பதாக கூறி, மாணவர்களிடம் 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை கமிஷன் வாங்கிக் கொண்டு எப் 1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்தனர்.

போலி விசா மூலம் அமெரிக்காவிற்கு படிக்க வந்த 130 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 129 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஹாட்லைன் அமைப்பு இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, உதவி வழங்குவதற்காக 24 மணி நேரம் செயல்படும் ஹாட்லைன் வசதியை, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்களின் நண்பர்கள், உறவினர்கள், 202-322-1190 and 202-340-2590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: