
Washington, USA: 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசார அறிமுக உரையை இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துவங்கினார். ட்ரம்புக்கு எதிரான கருத்துக்களோடு துவங்கியுள்ளார்.
வாக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே தனது பிரசாரத்தை துவங்கியுள்ளார். பலரும் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருப்பதால் கமலா ஹாரிஸ் விரைவாக தனது பிரசாரத்தை துவங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப்பை தினசரி பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே போல அதிபர் போட்டியிலும் பலரது பெயர்கள் இடபெற்றுள்ளன.
கமலா ஹாரிஸின் பிரசாரத்தில் ட்ரம்ப் அரசாங்கத்தை விமர்சித்தும், ட்ரம்ப் அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் பேசினார்.
ட்ராக் பல்கலைக்கழகத்தில் பேசிய கமலா ஹாரிஸ் "ஆப்கான் போரில் உள்ள குற்றங்கள், துப்பாக்கி கலாச்சாரம், ஹெல்த் கேர் ஆகிய விஷயங்களில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்றார்.
20,000 க்கும் அதிகமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு சில மணி நேரத்துககு பிறகு ஸ்டார்பக்ஸ் சிஇஒ ஹோவர்ட் சுயேட்சையாக தான் போட்டியிட போவதை அறிவித்தார்.
அவர் தனது உரையில், ட்ரம்ப் மட்டும் தகுதியற்ற அதிபர் அல்ல. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரின் அரசியல் சண்டையால் அமெரிக்கர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், "தன்னை ஜனநாயக கட்சிக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அவர்கள் இடதுசாரிகளாக மிக தூரத்தில் இருக்கிறார்கள்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக