இதில் அவர் ஆழ்ந்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு 2 மணியளவில் ரூமிற்கு வந்த புஜரி தாம் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை போர்வையை திறந்து ரூபாலியின் மீது வீசியுள்ளார்.
இதில் முகம் வெந்து, உடல் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட ரூபாலியை அவரது தோழிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் ரூபாலி உயிருக்கு போராடிய நிலையில், அதை பார்க்க முடியாத அவரது தந்தை, தனது மகளை கொன்றுவிடும்படி மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார். அதன் பின்னர் காயங்கள் குணமடைந்த நிலையில், புஜரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் போதிய ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.;
இந்நிலையில் ரூபாலி குல்திப் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான ரூபாலி லக்னோவில் உள்ள கொபி ஷாப் என்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களால் சேர்ந்து நடத்தப்படுவதில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக