

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நான் திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை. நானும் பச்சை திராவிடன்தான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அக்கட்சியைச் சேர்ந்த தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவே விமர்சனம் செய்துள்ளார். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்வைத்துள்ள கோஷம். கழகங்கள் இல்லாத் தமிழகம். ஆனால் நடத்துகின்ற விவாதம் திராவிடம் பற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், இது வீண் விவாதம் ஆரிய திராவிட இனவாத கட்டுக் கதைக்குச் சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று Dr. அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மற்றொரு ட்விட்டில், 2/2 நிலப்பரப்பைப் பொருத்தவரை ராஜா உட்பட இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் திராவிடரே. ஆனால் ஆரிய திராவிட இனவாதக் கட்டுக் கதைக்குச் சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளார்கள். இதை யாரும் மறுத்திட முடியாது. நிலப்பரப்பை இனமாகச் சித்திகரிப்பது ஏற்புடையதல்ல" என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக