

மின்னம்பலம் :ரஜினி
மக்கள் மன்றத்துக்கான வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்
அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளின்
பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர்
31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தனிக்
கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்த அவர்,
அதற்குள் அனைத்து தரப்பு மக்களையும் மன்றத்தில் இணைக்க வேண்டும் எனத் தனது
தொண்டர்களிடமும் வலியுறுத்தினார். முதற்கட்டமான செயலி ஒன்றையும் அவர்
தொடங்கினார். இதில், ஏராளமானோர் பதிவு செய்து உறுப்பினராகிவருகின்றனர். அதே
வேளையில், அவரது ரசிகர்களும் கிராமம் கிராமமாகச் சென்று மன்றத்தில்
உறுப்பினர்களைச் சேர்த்துவருகின்றனர். மன்றங்களுக்கு மாவட்ட அளவில்
நிர்வாகிகளை நியமிக்கும் பணியும் வேகமெடுத்துள்ளது. கடந்த 21ஆம் தேதி
வேலூர் மாவட்டத்திற்கான செயலாளர் உள்ளிட்ட 5 பொறுப்புக்களுக்கு நிர்வாகிகள்
அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜனவரி 31) திருநெல்வெலி மாவட்டத்திற்கான
நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
“ரஜினி மக்கள் மன்றத்தின் திருநெல்வேலி மாவட்ட கவுரவச் செயலாளராக
எஸ்.பானுசேகர், மாவட்ட செயலாளராக டாக்டர் கே.செல்வகுமார், மாவட்ட இணைச்
செயலாளராக எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர்களாக சி.குமரகுரு,
எம்.எம்.துரை, தளபதி முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞரணிச்
செயலாளராக கே.ஏ.என்.தாயப்பன், இளைஞரணி இணைச் செயலாளராக எஸ்.பகவதி ராஜன்,
மீனவரணிச் செயலாளராக ஏ.ஆல்ரின், விவசாய அணிச் செயலாளராக ஏ.ஆறுமுகம், தகவல்
தொழில்நுட்பப் பிரிவு அணிச் செயலாளராக ஜி.கார்த்திகேயன், மகளிரணிச்
செயலாளராக பி.பவானி குமணன், வழக்கறிஞர் அணிச் செயலாளராக ஜாஹிர் உசேன்
ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக