

இனிமேல் வஜுபாய் வாலா எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடியும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும், கவனிக்கப்படும் என்பதால் அவர் மீது அத்தனை பேரின் பார்வையும் திரும்பியுள்ளது.
வஜுபாய் வாலாதான் அடுத்து கர்நாடகத்தில் அமையப் போகும் ஆட்சியை முடிவு செய்யப் போகிறார். இதற்கு முன்பு கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடந்த கலாட்டாக்கள் உலகம் அறிந்தது. எனவே கர்நாடக ஆளுநர் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
சரி வஜுபாய் வாலா குறித்து ஒரு பார்வை பார்ப்போம். வஜுபாய் வாலா குஜராத்தைச் சேர்ந்தவர். இவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் ஆவார்.
முன்னாள் குஜராத் சபாநாயகர்
மாஜி மத்திய அமைச்சர்
தீவிர ஆர்.எஸ்.எஸ்
ஜனசங்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தீவிர ஆர்எஸ்எஸ் காரர். அவசர நிலை காலத்தில் 11 மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் கர்நாடக ஆளுநராக இருந்து வருகிறார் வஜுபாய் வாலா.தற்போது கர்நாடகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்ற பெரும் சிக்கலில் வஜுபாய் வாலா உள்ளார். அவரது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக