
Prasanna VK -GoodReturns Tamil : நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றி வல்லரசு நாடுகளில் இருப்பதைப் போலச் சரக்கு மற்றும் சேவை வரியான ஒற்றை வரி அமைப்பை இந்தியாவிலும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியில் அமலாக்கம் செய்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.
இதன் பாதிப்புகள் இன்னமும் சந்தையில் குறையாமல் இருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியால் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாக ஆய்வு செய்து முடிக்காத நிலையிலும், 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் வருமானம் மற்றும் கார்பரேஷன் வரி விதிப்புகளான நேரடி வரி விதிப்பை மாற்ற முடிவு செய்துள்ளார் மோடி. நிதியமைச்சகம் நிதியமைச்சகம் நிதியமைச்சகம் தற்போது புதிய வரிச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளாது என அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரனாப் முகர்ஜி பிரனாப் முகர்ஜி 2009ஆம் ஆண்டு Direct Taxes Code என்று அழைக்கப்படும் டிடிசி திட்டத்தைப் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துப் பிரனாப் முகர்ஜி இதனை வெளியிட்டார். ஆனால் இது நடைமுறைக்கு வராமல் சில ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்டது. நரேந்திர மோடி நரேந்திர மோடி இந்நிலையில், மறைமுக வரியை ஜிஎஸ்டி மூலம் மாற்றியமைத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தற்போது வருமான வரி சட்டத்தையும் மாற்றி எழுத முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் நேரடி வரிச் சட்டத்தைச் சமகாலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் எனச் சுட்டிகாட்டியுள்ளார். இதன் படி நிதியமைச்சகமும் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. பட்ஜெடுக்கு முன்.. பட்ஜெடுக்கு முன்.. மேலும் இந்தப் புதிய வரி விதிப்புச் சட்டங்கள் பட்ஜெட் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் எனவும், மக்கள் கருத்தை கேட்டப்பின் அமலாக்க பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேர்தல் பொதுத் தேர்தல் 2019ஆம் ஆண்டு வரும் காரணத்தால், நேரடி விதிப்பு மாற்றங்கள் அதற்கு முன்னதாகவே செய்யப்பட்டு 2019-20 நிதியாண்டு புதிய சட்டத்துடன் துவங்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இந்தப் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Direct Taxes Code Direct Taxes Code பல வருடங்களுக்கு முன்னதாகக் கொண்டு வரப்பட்ட Direct Taxes Code சட்டத்தில் பல வரிச் சலுகைகள் இருந்தது. குறிப்பாகப் பிராவிடென்ட் பண்ட் மற்றும் பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் ஆகியவற்றுக்கான முதலீட்டுக்கு வரிச் சலுகை அளித்திருந்தது.
வரி விதிப்புகள் வரி விதிப்புகள் ப.சிதம்பரம் தலைமையிலான உருவாக்கப்பட்ட இந்த வரிச் சட்டத்தில் 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழுமையான வரி விலக்கும், 25 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் என்ற அதிகப்படியான வரி விதிப்பு, 10-25 லட்சம் ரூபாய் வருமான உடையவர்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான வரிச் சலுகைகள் இதில் நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. காலஅவகாசம் வேண்டும்.. காலஅவகாசம் வேண்டும்.. ஏற்கனவே ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் நிறுவனங்கள் பல விதிமானப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. அதிகம் லாபம் தரும் சேவை துறையும் கடந்த 2 காலாண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. இத்தகையை இக்கட்டான சூழ்நிலையில் நேரடி வரி மாற்றத்திற்கு, சந்தைச் சீராகும் வரை சிறிது காலஅவகாசம் தேவைப்படுகிறது. /tamil.goodreturns.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக