Gajalakshmi - Oneindia Tamil : திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள PSNA தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார் மாணவி தாரணி.
இவர் இன்று அதிகாலையில் விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாரணி படுகாயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவி தாரணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார். "நேற்று இரவு எங்களுக்கு போன் செய்து விடுதி நிர்வாகத்தினர் கொடுமைபடுத்துவதாகச் சொன்னாள், காலையில் வந்து அழைத்து செல்வதாகக் கூறினோம்.
என்னுடைய மகள் மன உளைச்சலில் இருக்கிறாள் என்று அவளை பார்த்து கொள்ளச் சொல்லுமாறு கல்லூரி நிர்வாகத்தினர், விடுதி காப்பாளர்களுக்கு போன் செய்தோம்.
உண்மை வெளி வரவேண்டும் ஆனால் ஒருவர் கூட போனை எடுக்கவேயில்லை, என் மகள் போல வேறு யாரும் பாதிக்கக் கூடாது. கல்லூரியில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும், என்னுடைய பிள்ளை செப்புச் சிலை போல இருப்பாள் அவளை என்ன கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினார்களோ தெரியவில்லையே.
வார்டனுக்கும் தனக்கும் தகராறு இருப்பதாக தாரணி சொன்னாள்.
என்னுடைய மகள் கடுமையாக நடந்து கொள்பவள், யாராவது குறை சொன்னால் தாங்கிக்கொள்ள மாட்டாள்.
நிர்வாகம் மறைக்கிறது நிர்வாகம் மறைக்கிறது என்னுடைய மகள் விழுந்த இடத்திலேயே இறந்துவிட்டாள். ஆனால் அவள் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தான் உயிரிழந்தாள் என்று கல்லூரி நிர்வாகத்தினர் பொய் கூறுகிறார்கள்" என்றும் அவர் கண்ணீர் விட்டுள்ளார் /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக