செவ்வாய், 26 செப்டம்பர், 2017

இராமநாதபுரம் . 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு: அகழாய்வு செய்ய கோரிக்கை

இராமநாதபுரம் அருகே போகலூரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<>இராமநாதபுரம் அருகே போகலூர் கண்மாயின் வடக்கில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக ஆசிரியர்கள் காந்தி, பூமிநாதன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, முனைவர்பட்ட ஆய்வாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் களஆய்வு செய்தனர்.இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,">வைகை ஆற்றில் இருந்து 2கி.மீ. தூரத்தில் உள்ள இப்பகுதி காத்தான் ஓடை மூலம் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்கரையில் உள்ள முல்லைக்கோட்டை முனீஸ்வரர்  கோயில் சுற்றுப் பகுதியில் புதியகற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி, தானியங்களை அரைக்கப் பயன்பட்ட அரைப்புக்கற்கள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடுகள்,
மட்பாத்திரங்களை வைப்பதற்குரிய பானைத் தாங்கிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்குப் பயன்படும் தக்களி, வட்டச்சில்லுகள், சுடுமண் கெண்டியின் உடைந்தபகுதி, கைப்பிடி, மான் கொம்பு, இரும்பு தாதுக்கள், இரும்புக்கழிவுகள், இரும்புக் கத்தியின் முனைப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. >புதிய கற்காலம்">புதிய கற்காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது.  மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான்.>போகலூரில் கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. இதன் நீளம் 7 செ.மீ. அகலம் 5.5 செ.மீ. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். இதன் மேல்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ளன. இது அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இதன் அகன்ற வெட்டும் பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி கூர்மை குறைந்தும் உள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். இங்கு கிடைத்த அரைப்புக்கற்கள் புதிய கற்காலம் முதல் தானியங்களை அரைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்">இரும்புக்காலம்;புதியகற்காலத்தை அடுத்த பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் கூறுவார்கள். இங்கு இரும்பு சார்ந்த பல பொருள்கள் கிடைத்திருப்பதால் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறையை அறிந்திருந்தனர் என அறியமுடிகிறது. பானை ஓடுகளில், வழுவழுப்பானவை சொரசொரப்பானவை என இருவகைகள் உள்ளன. சிவப்பு நிற பானைகளின் வெளிப்பகுதியில் வண்ணம் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது. >குறியீடு உள்ள பானை ஓடுகள்; ஒரு கருப்பு சிவப்பு பானை ஓட்டில் ‘த’ என்னும் தமிழ் பிராமி எழுத்து போன்ற குறியீடும், மற்றொன்றில் திரிசூலக் குறியீடும் உள்ளன. இவை 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்தவை.>கவண்கல்&>வேட்டைக்கும், பாதுகாப்புக்கும் பயன்பட்ட ஒரு இன்ச் விட்டமுள்ள வட்டமான கவண்கல் இங்கு கிடைத்துள்ளது. இது புதிய கற்காலம் முதல் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.">உகாய் எனும் மிஸ்வாக் மரம்<>மேலும் பானை ஓடுகள் சிதறிக்கிடக்கும் பகுதியில் சீமைக்கருவை மரங்களுடன்  50 க்கும் மேற்பட்ட உகாய் எனும் மிஸ்வாக் மரம் (Miswak) (Salvadora Persica) செழித்து வளர்ந்துள்ளது. ஐவகை நிலங்களில் பாலைத்திணைக்குரிய மரமான இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் இலைச்சாறு சிறுநீரகக் கல்லுக்கு சிறந்த மருந்தாகும். வேர்கள் பல்துலக்கப் பயன்படும்.<>அகழாய்வு செய்ய கோரிக்கை<">இங்கு புதிய கற்காலக் கருவியோடு இரும்புக்கால, சங்ககால பானை ஓடுகளும் கிடைப்பதன் மூலம் புதிய கற்காலம் முதல் சங்ககாலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியாக இது விளங்கியுள்ளதை அறியமுடிகிறது.<">புதிய கற்காலக் கருவிகள், வட தமிழ்நாட்டில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழ்நாட்டில் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.>புதிய கற்காலக் கருவி தென்மாவட்டங்களில் மிகஅரிதாகவே கிடைப்பதால் இதன் பழமையை மேலும் தெரிந்துகொள்ள இப்பகுதியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.<">இரா.பகத்சிங்</  நக்கீரன்

கருத்துகள் இல்லை: