வெள்ளி, 29 செப்டம்பர், 2017

திருமா :பொது எதிரியை எதிர்க்க உருவான கூட்டணி.


Bhimraj Gandhi  : ஒற்றுமையே வாழ்வு.. இல்லையேல் தாழ்வு..
1. விடுதலை சிறுத்தைகள் தேர்தல் நோக்கில் திமுகவுடன் தற்போது இணையவில்லை. இது பொது எதிரியை எதிர்க்க உருவான கூட்டணி.
2. திமுக வுடன் உறவு சுமுகமாகும் முன்பே திராவிடர் கழகம், தமிழக கம்யுனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல நீட் எதிர்ப்பு மற்றும் மாநில சுயாட்சி மாநாடுகளையும் விடுதலை சிறுத்தைகள் செய்துள்ளனர்.
3. விடுதலை சிறுத்தைகளே முன்னிருந்து 'மாநில சுயாட்சி மாநாடு' நடத்த காரணம் மாணவி அனிதாவின் மரணம். அது ஏற்றிய சமூக நீதிக்கான தீயில் பறிபோகும் மாநில உரிமைகளை பற்றி மக்களை விழிப்படைய செய்ய சிறிய கால இடைவெளியில் நடந்த நிகழ்வு அது.
3. நீட் தேர்வின் கொடுமைகளை முன் கூட்டியே கணித்து எதிர்த்தவர் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி. முதலில் ஆதரவு தெர்வித்தோர் திமுகவும் விடுதலை சிறுத்தைகளும்.
4. ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய நீட் எதிர்ப்பு போராட்டத்தை ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதை திசை திருப்பவே ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைய அரசு அனுமதித்தது. முடிவில் அடித்து இனி எப்போராட்டமும் செய்யாதே என எச்சரித்தது.
5. சமீபத்தில் நிகழ்ந்த குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல், இந்த வீடியோவில் திருமா அவர்கள் குறிப்பிடும் உத்திர பிரதேச தேர்தலில் வென்ற யோகி ஆதித்யனாத் மீதும் பெரும் அதிருப்தி கிளிம்பியுள்ளது.

6. தமிழர்களுக்கு திராவிட அரசியல், சாதி அரசியல் தெரிந்த அளவு இந்துத்வ அரசியல் தெரியவில்லை. காரணம், இந்துத்வம் என்பது சாதி, மதம் மட்டுமல்ல. முதலாளித்துமும் கலந்துள்ளது.
7. தமிழகத்தை பொறுத்தவரை புறவாசல் வழியாக பாஜக ஆட்சி அமைத்து ஒரு வருடம் ஆகிறது. பன்னீர்செலவத்தை கேள்வி கேட்டால் எச்.ராஜா பதில் சொல்வது வேடிக்கை.
8. ஜெ. மரணத்தில் பாஜக அரசிடம் நியாயமான விசாரணை எதிர்ப்பார்பது வீண். எங்கே ஆட்சி கலைந்தால், தனது கார்பரேட் திட்டங்களுக்கு திமுக ஆப்படிக்குமோ என்ற அச்சத்தில் தான் முட்டு கொடுத்து வருகிறது. அவை எல்லாமே ஜெ. எதிர்த்த திட்டங்கள்.
9. பாஜகவின் நோக்கம் ஆட்சியை பிடிப்பதுதான் என்றாலும் அதை விட முக்கியமாக திமுகவை பலவீனம் அடைய செய்வது. தமிழகத்தில் நேரே மோத முடியாததால் சரத்குமார், சீமான், கமல் போன்றோரை மறைமுகமாக பயன்படுத்தி வருகிறது.
10. ஆர்எஸ்எஸ் என்பது ஒரே ஒரு அமைப்பு அல்ல. அவை பல்வேறு கிளைகளாக பரவியுள்ளன. அவர்களின் நோக்கமே அனைத்தையும் இந்து, இந்தி, இந்துஸ்தான் என காவி மயம் ஆக்குவது.
அதற்கு முதல் படியாக ஜனாதிபதி முதல் நீதிபதிகள் போன்ற உயர்ந்த பதவிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரையே தேர்வு செய்கின்றனர். தமிழகத்தை இன்று ஆள்வது அந்த நீதிபதிகளின் தீர்ப்புகள் தான். (எடு:நவோதயா)
11. காவிகள் எங்கெல்லாம் பாஜக ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊடகங்களை கட்டுபாட்டில் வைத்துள்ளனர் (தமிழ்நாடு உட்பட.. தந்தி டிவி, புதிய தலைமுறை 100% காவி அடிமை ஊடகம்)
மாநில சுயாட்சி மாநாட்டில் RSSஐ கிழித்து தொங்கவிட்ட கேரள முதல்வரின் உரையில் RSS என்பதையே ஒளிபரப்பவும் இல்லை, குறிப்பிடவும் இல்லை.
அதே சமயம், கர்நாடகா, திரிபுரா போன்ற காங்கிரஸ், கம்யுனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் தங்களின் குறைகளை எழுதும் பத்திரிக்கையாளர்களை கொலை செய்து வருகின்றனர். (கவுரி லங்கேஷ், Santanu Bhowmik என பட்டியல் நீள்கிறது.)
@@@@@@@@@
மோடியை ஏன் கார்பரேட் நிறுவனங்கள் பல கோடி செலவு செய்து விளம்பரம் செய்தன?
முகேஷ் அம்பானி சொத்து 58% வளர்ச்சி
அதானி சொத்து 66% வளர்ச்சி
பாபாராம்தேவ் சொத்து 173% வளர்ச்சி
குறிப்பு : பாபா ராம்தேவ் சொத்து மதிப்பு உயர்வைக்கண்டு அம்பானி அதிர்ச்சி
1. பாஜக பெற்ற நன்கொடை ரூ.705 கோடி - 18/08/2017
//கடந்த 2012-13 முதல் 2015-16 வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் 5 தேசிய கட்சிகளுக்கு ரூ.956.77 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளன. அதிகபட்சமாக பாஜக மட்டும் 2,987 நிறுவனங்களிடமிருந்து ரூ.705.81 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 167 நிறுவனங்களிடமிருந்து ரூ.198.16 கோடியை பெற்றுள்ளது.//
http://tamil.thehindu.com/india/article19515548.ece
2. பதஞ்சலி ஆச்சார்யா வளர்ச்சி பார்த்து ஆடிப்போன முகேஷ் அம்பானி..!
//பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி நிறுவனத்தைக் கட்டியாளும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் மோடியின் நெருங்கிய நண்பரான கொளதம் அதானிக்கும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா-விற்கும் மத்தியிலான சொத்து மதிப்பில் வெறும் 600 கோடி ரூபாய் தான் வித்தியாசம்.//
https://tamil.goodreturns.in/…/mukesh-ambani-shocked-on-pat…
3. புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகையான "தி ஜப்பான் டைம்ஸ்" மோடி முகத்திரையை கிழித்து எரிந்துள்ளது.
உலக அரங்கில் வர்த்தகத்தில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு வருவதாக கூறிய மோடி 130-190 வது ரேங்கில் தான் இருக்கிறது என உலக வங்கி அறிக்கையளித்து உள்ளதை சுட்டி காட்டி மூஞ்சியில் துப்பி விட்டது.
அது மட்டும் அல்ல, இந்தியாவின் மிகப்பெரிய துறையான கட்டுமான துறையில் முந்தைய அரசை விட கடும் சரிவை சந்தித்துள்ளது.
சர்ஜிக்கல் அட்டாக், ரூபாய் நோட்டு தடை, பொய்யான வாக்குறுதிகள், போலியான திட்டங்கள், அறிக்கைகள், மாட்டிறைச்சி தடை, மதக்கலவரம், பாதுகாப்மின்மை, அச்சுறுத்தல், என ஒட்டுமொத்தமாக மோடியை நாற் நாறாக கிழித்து விட்டார்கள்.
எலும்பு துண்டிற்கு அலையும் இந்தியாவின் ஆகப்பெரும் ஊடகங்கள் மறைத்ததை எல்லாம் ஜப்பான்காரன் கிழி கிழினு கிழித்து விட்டான்.
மோடி அப்படி மோடி இப்படி உலக ஊடகங்கள் புகழ்கிறது என பெருமையா பேசி பக்தாஸ்கள் எல்லாம் இப்ப சாணி அப்பின மூஞ்சி மேனிக்கே திறியுறானுங்க.
அவனுங்களை சொல்லி குத்தமில்லை, அவனுங்களும் பாஜக மாநாடுக்கு வந்த சேர்கள் மாதிரி தான். அந்தளவுக்கு தான் அறிவு இருக்கும்.

கருத்துகள் இல்லை: