திங்கள், 25 செப்டம்பர், 2017

பிரதமர் மோடி : அனைத்து வீடுகளுக்கு மின்சாரம் ! ஸௌபாக்கியா யோஜனவாம் .... 1975 இல் கலைஞர் அரசு ஏற்கனவே செய்து முடித்த சாதனை!

Devi Somasundaram 1975 லயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் தரபட்டு 1989 ல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க படுவது உறுதி செய்ய பட்டதால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசு ...ஒத்தை லைட் மூலம் மின்சாரம் அற்ற குடிசைகள் இல்லை என்பதை உறுதி செய்தது தமிழக அரசுகள்....தமிழ் நாடு 40 வருடம் முன்பே சாதித்தது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்.. 1989 அனைத்து விவசாய பம்ப் செட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி விட்டார்..
அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு! புதிய திட்டம் தொடக்கம் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. சவுபாக்கியா யோஜனா என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அதாவது 2019ம் ஆண்டு மார்ச்சி 31ம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம் ஆகும். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு 500 ரூபாயில் மின் இணைப்பு என்ற திட்டமும், மின் இணைப்புக்கான தொகையை 10 தவணைகளில் செலுத்தலாம் என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நக்கீரன்

கருத்துகள் இல்லை: