வியாழன், 28 செப்டம்பர், 2017

விஜயகாந்த் கட்சி ex எம் எல் ஏ பாஜகவில் ஐக்கியம் ... ஏராளமான ஆதரவாளர்களோடு ....

தமிழகம் தேசியத்துக்குத் திரும்ப வேண்டியது கட்டாயம்!
மின்னமலம்: தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காரைக்குடியில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவிருக்கிற நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பாஜக வலை வீசுகிறது என்றும் தர்மபுரி முன்னாள் எம்.எல்.ஏ. பாஜகவில் இணையப் போகிறார் என்றும் மின்னம்பலத்தில் நேற்று.
மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மாலை சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தர்மபுரி முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ. பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் மாநிலத் தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் கணிசமான தேமுதிகவினரும் இணைந்தனர். நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் முரளிதர் ராவும் கலந்துகொண்டார்.

இந்த இணைப்பு விழாவில் பாஸ்கரை வரவேற்றுப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “பாஜகவை நோக்கி பல்வேறு இயக்கங்களில் இருந்தும் பல்வேறு தலைவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் பல மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைவதற்காக காத்திருக்கிறார்கள். தமிழகத்துக்கு இது முக்கியமான காலகட்டம். தமிழகம் தேசியத்தை நோக்கித் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழ்நாடு பல்வேறு சவால்களையும், பிரச்னைகளையும் இன்று எதிர்கொள்வதற்குக் காரணமே திராவிட கட்சிகளின் ஆட்சிதான். அவர்கள் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணாமல் அப்படியே விட்டிருக்கிறார்கள். அதனால், தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் இன்று பெரிய அளவில் எழுந்து நிற்கின்றன.
தமிழகம் தேசியத்தின் பக்கம் வந்தால்தான் அண்டை மாநிலங்களுடனான நமது பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும். எனவே தமிழகத்தில் பாஜக பக்கம் அனைவரும் அணிதிரள வேண்டும்” என்றார் தமிழிசை.
கட்சியில் சேர்ந்திருக்கும் பாஸ்கருக்கு பதவி ஏதாவது கொடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “இன்று நம்முடன் இணைந்திருக்கும் பாஸ்கர் கட்சிக்குப் பக்கபலமாக இருப்பார். கட்சி அவருக்குப் பக்கபலமாக இருக்கும்” என்று சாமர்த்தியமாகப் பதில் சொன்னார் தமிழிசை.

கருத்துகள் இல்லை: