வியாழன், 28 செப்டம்பர், 2017

ஐ எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கேரளா பாதிரியார் விடுதலை

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பாதிரியார் தாம் உழுன்னலில் இந்தியா திரும்பினார்
புதுடெல்லி, கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் தாம் உழுன்னலில். ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. அங்கு பாதிரியார் தாம் பணியாற்றி வந்ததுள்ளார்.கடந்த 2016 மார்ச்சில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் முதியோர் இல்லம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதிரியார் தாமை பிணைக்கைதியாக பிடித்துச் சென்றனர். தன்னை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பரில் வீடியோ மூலம் தாமஸ் வேண்டுகோள் விடுத்தார்.
கேரள சட்டச் சபையில் பாதிரியார் தாம்மை விடுவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் பாதிரியார் தாம் உழுன்னலில் பயங்கரவாதிகள் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், பாதிரியார் தாம் இன்று காலை இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் பாதிரியார் தாம் உழுன்னலில்,” மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இறைவன் இந்த நாளை சாத்தியமாக்கி இருப்பதாகவும், அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார். பாதிரியார் தாம், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  dhinathanthi


கருத்துகள் இல்லை: