சனி, 30 செப்டம்பர், 2017

தமிழக புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்... இவரின் கடந்த கால வரலாறு .. ஒரு பார்வை


நக்கீரன :தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, இன்று அனைத்துத்துறைகளிலும் தமிழகத்தின் முன்னேற்றம் தேக்க நிலைமைக்கு வந்துவிட்டது.
"234 சட்டமன்ற உறுப்பினர் பலம் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கிறது", என்று தேர்தல் ஆணையத்தில், முதலமைச்சரின் அணி சார்பில் வெளிப்படையான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கின்ற இந்தநேரத்தில், பதவியேற்கும் புதிய ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்



தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்தின் வாழ்க்கைக் குறிப்பு.

;மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்தவர் பன்வாரிலால் புரோஹித். சமூக ஆர்வலர், அரசியல்வாதி, கல்வியாளர், தொழிலதிபர் என்ற பன்முகம் கொண்ட இவர், 1977 ஆம் ஆண்டுதான் தீவிர அரசியலுக்கு வந்தார்

;மராட்டிய சட்டமன்றத்திற்கு நாக்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1978 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 1980 ஆம் ஆண்டு அதே தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு 1982 ஆம் ஆண்டு மராட்டிய அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.

1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நாக்பூர்-கம்ப்டீ தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ராணுவ அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவிலம் இடம்பெற்றார்.

;பின்னர் பாஜகவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு பாஜக சார்பில் நாக்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.<;">கோபாலகிருஷ்ண கோகலே நடத்திய தி ஹிடாவடா என்ற ஆங்கில பத்திரிகையை மீண்டும் கொண்டுவந்தவர் இவர். அந்தப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும் இருக்கும் இவர், பத்திரிகையை மத்திய இந்தியாவில் பரவலாக அறிமுகப்படுத்தினார். அந்தப் பத்திரிகைக்கு ஜபல்பூர், ராய்பூர், போபால் ஆகிய நகரங்களிலும் கிளைகளைத் தொடங்கினார்.;

அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் கவர்னராகவும் இவர் பணியாற்றினார்.
பாபர் மசூதி இடிப்புக்கு பிறகே இவர் பாஜகவில் சேர்ந்ததார். பாஜக தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கட்சியிலிருந்து விலகி விதர்பா ராஜ்ய கட்சியை தொடங்கினார். பின்னர் மீண்டும் பாஜகவில் சேர்ந்த பின்னரே ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

;இரண்டு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றி இருக்கும் இவர், இப்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை இவர் ஆளுநராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: