
இந்நிலையில் பங்களா காவலாளி கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரில் திபு, உதயன், சதீஷன், சந்தோஷ் ஆகிய 4 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மலப்புரத்தில் ஜித்தன் ராய், அர்ஷத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களை கோவை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கொலை தொடர்பாக குட்டி, மனோஜ் உள்பட 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பிடிபட்டிருக்கும் 6 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் இருந்ததை அறிந்து, கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்காக, பங்களாவிற்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும், கொள்ளையடிக்க முயற்சித்த பங்களாவிற்குள் நுழைந்த போது தான் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதாகவும், காவல்துறையினரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கனகராஜூக்கும், சயானுக்கும் இடையே, கோவையை சேர்ந்த அதிமுக முக்கியப் புள்ளி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொடநாடு காவலாளி கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக