ஞாயிறு, 22 ஜனவரி, 2017

அலங்காநல்லூரில் தோல்வி - திண்டுக்கல்லில் ஜல்லிகட்டு நடத்தி பார்க்க பன்னீர்செல்வம் ஆசை? முயற்சிக்கிறார்?

மதுரையில் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை 2 மணி நேரமாக நடத்தினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதில், கிரிஜா, மதுரை கலெக்டர் வீரராகவராவ், ஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி பிதாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும், விடிய விடிய மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையும் விரிவாக விவரித்துள்ளார் கலெக்டர். இதனால் அலங்காநல்லூர் செல்வதில் பயனில்லை எனவும் முதல்வரிடம் சொல்லப்பட்டது. அதனால் அலங்காநல்லூர் செல்வதை கைவிட்டார் முதல்வர். அலங்காநல்லூர் செல்ல முடியாமல் போனதால் சென்னை திரும்புகிறார் முதல்வர் என்று பேசப்படுகிறது. சென்னை திரும்பியதும் மத்திய அரசிடம் விவாதிக்கவிருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டம் ’நத்தம் கோயில்பட்டி’ கிராமத்தில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை துவங்கிவைக்கிறார் என்று நக்கீரன் இணையதளத்தில் பரபரப்பு செய்தி வெளியானது.
இதையடுத்து நத்தம் கோயில்பட்டி கிராமத்தில் போராட்டக்காரர்கள் குவிந்து ஓபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், எதிர்ப்புகளை சமாளித்து எப்படியும் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை நடத்தி வெற்றிக்கொடி நாட்டிவிட வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் என்று தகவல். ஜல்லிக்கட்டை நடத்திவிட்டுத்தான் சென்னை திரும்ப வேண்டும் என்று அமைச்சர்களும் உறுதியுடன் இருப்பதாக தகவல்.நக்கீரன்


கருத்துகள் இல்லை: