சனி, 13 டிசம்பர், 2014

ரகுராம் ராஜன்:மோடியின் தயாரிப்பு துறையை மையப்படுத்தும் கோஷம் ஆபத்தானது!

புதுடில்லி: ''தயாரிப்பு துறையை மட்டும் மையப்படுத்தி, 'இந்தியாவில் தயாரித்தல்' என்ற கோஷத்தை முன்வைப்பது ஆபத்தானது,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.பிரதமர் மோடி, கடந்த சுதந்திர தின விழாவில், உலக உற்பத்தி பொருட்களின் மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்றார்.இதுகுறித்து, டில்லி யில் நிகழ்ச்சி ஒன்றில், ரகுராம் ராஜன் சூசகமாக கூறியதாவது: தயாரிப்பு துறையை மட்டும் ஊக்கப்படுத்துவது ஆபத்தாக முடியும். அது, சீனாவில் சாத்தியமானது. ஆனால், இந்தியாவின் நிலை வேறு. நாம் யதார்த்த நிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும். சீனா, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை ருசி பார்த்தது. ஆனால், அது இந்தியாவிற்கு ஏற்புடையதாக இருக்குமா என்பது எனக்கு தெரியாது. அது, அவ்வளவு சுலபமானதும் அல்ல.   அருமையாக சொல்லி யுள்ளார்... கமல் மாதிரி நடிக்க போறேன்னு ஒரு 100 கோடி படத்தை நம்ம பவர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க போகிறேன் என்று ஒருவர் பூஜை போட்டால் நம்ம அவரை எப்படி பாப்போம்...சீன ஒரு சர்வாதிகார நாடு ..அங்கு நிலங்களில் எழுபது சதவிகிதம் அரசாங்கத்திடம் உள்ளது..எந்த அரசு முடிவையும் எந்த ஒரு கோர்ட்டும் நிறுத்த முடியாது... அரசாங்க முடிவை முட்டுக்கட்டை போட அங்கு எதிர்கட்சிகள் இல்லை...எனவே ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க ஒரு சாலை போட , ரயில் திட்டம் போட நிலம் ஒதுக்குவது மிக மிக எளிது... இங்கு இவைகளை நினைத்து பார்க்க முடியாது...எனவே சீனா வழி செல்வது புலியை பார்த்து பூனை சூடு போட்ட கொண்ட மாதிரிதான்...நம் நாட்டிற்கு , நம் அரசியல் அமைப்பு க்கு தகுந்தாற்போல் திட்டம் தீட்டி நாட்டை வள படுத்துங்கள் ... ஒரு 2.5 பில்லியன் டாலர் இந்திய பொருளாதாரத்தை மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரமாக இந்திய சூழ்நிலையிலேயே மாற்றி போர்லாதாரத்தில் விளிம்பில் இருந்த இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றி உள்ளார்கல்.. இப்போது போல அவர்கள் வழியிலேயே செல்லுங்கள்...
ஏற்கனவே, பல ஆசிய நாடுகள், அதில் சூடுபட்டுள்ளன. இது, ஏற்கனவே பரிட்சித்து பார்க்கப்பட்டு, பயனளிக்காத கொள்கை. இதனால், உள்நாட்டில் போட்டி குறையும். இது, பொருட்களின் விலையை உயர்த்தி, நுகர்வோருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பொருட்களின் போக்குவரத்து செலவை குறைக்க வேண்டும். வரிச் சுமையை குறைக்கும் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே, வரும் ஆண்டுகளில், சிறப்பான வளர்ச்சி காண முடியும். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை: