வெள்ளி, 12 டிசம்பர், 2014

சீனர்களை Online திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் பலரை காணவில்லை!

சீனாவின் வடபகுதியில், ஹெபேய் என்னும் மாகாணத்தில் சீனர்களை திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை.கிராமப்புறங்களில் உள்ள வறிய சீன ஆண்களை திருமணம் செய்த இந்தப் பெண்களை சீனப் போலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.
இந்த பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவியை பெண் கல்யாணத் தரகரையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த திருமண ஏற்பாடுகளுக்காக இந்த தரகர் ஒவ்வொரு பெண்ணுக்கும் 16,000 டாலர்கள் வரை தரகுப் பணம் பெற்றிருக்கிறார்.
இந்தப் பெண்கள் ஒட்டுமொத்தமாக காணாமல் போனது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மாகாண அதிகாரி ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
சீன ஆண்கள், சீனப் பெண்களை திருமணம் செய்வதாயின் அவர்களுக்கு நிறைய பணத்தை கொடுத்தாக வேண்டுமாம். அதனால், பல வறிய ஆண்கள் வெளிநாடுகளில் இருந்து பெண்களை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் காரணமாக சமூகத்தில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அங்கு பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே சமூகத்தில் முன்னுரிமையுமாம். இதனால் இப்போது பெண்கள் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. ஆண்களுக்கு திருமணம் செய்ய உள்ளூரில் பெண் கிடைப்பதில்லை.
இந்த நிலையிலேயே இப்படியாக வியட்நாமிய பெண்களை பணம் கொடுத்து சீனர்கள் திருமணம் செய்திறார்கள். ஆனால், அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி சென்று விடுவதாக அவர்களில் சிலர் முறையிடுகிறார்கள். bbc.tamil

கருத்துகள் இல்லை: