செவ்வாய், 9 டிசம்பர், 2014

ராஜபார்ட் ரங்கதுரையை காவியத்தலைவன் போன்ற கழிசடைகளோடு ஒப்பிடவே கூடாது! மதிமாறன் .

M_S_VISWANATH_1281847g
"வே.மதிமாறன்: பி. மாதவன் இயக்கிய, ராஜபார்ட் ரங்கதுரையைப் பலரும் காவியத்தலைவனுடனும் இன்னும் சில நாடகங்களைப் பின்னணியாகக் கொண்ட படங்களோடும் ஒப்பிடுகிறார்கள்.
ராஜபார்ட் ரங்கதுரை, தமிழில் வந்த பல சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது குறைபாடுகள் உள்ளதுதான். ஆனால், சங்கரதாஸ் சுவாமிகள் பாணியிலான நாடகத்திற்கும் அதுபோன்ற நாடகக் குழுக்களில் உள்ள கலைஞர்கள் பற்றிய பின்னணியைக் காட்டியதில் இந்தப் படமே முதன்மையானது. இன்றும் தென் மாவட்டங்களில் நாடக கலைஞர்கள் மத்தியில், ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பெரிய மரியாதை உண்டு.
Rajapart Rangaduraiராஜபார்ட் ரங்கதுரையின் ஒட்டுமொத்த திரைக்கதையில் செயற்கைத் தனம் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி அந்தப் படத்தில் இந்தியத் தரத்திற்கு இணையாக அல்லது முன் மாதிரியான சில முக்கியத்துவம் உண்டு.
முதன்மையானது,மெல்லிசை மன்னரின் இசை. பாடல்கள். அந்தக் கால நாடகக் காலத்தை இன்றும் காற்றில் நிறுத்தும் பாடல்கள். சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் அமைந்த ‘தில்லை அம்பல..’ – ‘வந்தேன் வந்தனம்..’ போன்றவை.
‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்..’ பாடலின் வித்தியாசமான காம்போஸிசன் இந்திய இசை உலகிற்கே புதிது.
சங்கரதாஸ் சுவாமிகளின் பாணியில் பாடல் ஆரம்பித்து, பிறகு அதிலிருந்து தரம் உயர்ந்து, துவங்கும் பல்லவி.
முதல் சரணம் முடிந்து, மீண்டும் பல்லவி வரும்போது, ஒரு பாடலில் இரண்டு மெட்டுக்கள். இரண்டும் ஒன்றொடு ஒன்று தழுவி, உரசல் இல்லாமல்.. இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
‘மதன மாளிகையில்..’ ஆண் குரல் பாடிக் கொண்டிருக்கும்போதே, பெண் குரல் அதே வரியை வேறு மெட்டில் ஆண் குரலின் மேல் மெல்லத் தவழ்ந்து செல்லும்.

ஆண் குரல் அமைதிகாக்க, பெண் குரல் முடியும் முன்னே.. இப்போது மீண்டும் ஆண் குரல் பெண் குரலின் மேல் மெல்லத் தடவி செல்லும்..
இந்த மாயா ஜாலத்தை மெல்லிசை மன்னர்தான் இசை உலகில் முதலில் செய்தார். மெல்லிசை மன்னரின் இந்தப் பாணியைப் பின்பற்றி, இசைஞானி, சிட்டுக்குருவி படத்தில், ‘என் கண்மணி.. உன் காதலி.. எனைப் பார்த்ததும்..’ – பகல் நிலவு படத்தில், ‘பூ மாலையே.. தோள் சேரவா..’ போன்ற பாடல்களில் மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.
இந்தச் சிறப்புக் குறித்து மெல்லிசை மன்னரிடம், நான் கேட்டபோது. அவர் மிகச் சாதாரணமாக எந்தப் பெருமையும் இல்லாமல்,
“கம்போசிங் போது பல மெட்டுக்கள் போட்டோம்.. எதுவும் திருப்பதியா அமையல… அப்போ அடிக்கடி டீ கொண்டு வந்து கொடுத்த பையன்.. ஜன்னல் வழியா எனக்குச் செய்கை செய்தான். ‘முதல் மெட்டு, அய்ந்தாவது மெட்டு இரண்டையும் கலந்து போடு’ என்று. அப்படிப் போட்டதுதான் இது” என்றார்.
இந்தப் படத்தின் இரண்டாவது சிறப்புச் சிவாஜி கணேசன். அவரைத் தவிர்த்து வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நாடக மேடையில் கம்பீரம், யதார்த்தம், மிகைப் படுத்தப்பட்ட உணர்ச்சி என்று அழகியலாக அள்ளித் தெளித்திருப்பார்.
‘அம்மாம்மா.. தம்பியென்று..’ பாடலில் அவர் உடல் மொழி நடிப்பிற்குப் பாடம். விஸ்வநாதன், சிவாஜி, டி.எம்.எஸ் மூவரும் இணைந்து கலங்கடிப்பார்கள்.
பாடலின் குளோசப் ஷாட்டுகளில் – டேபிள் டென்னிஸ் பேட்டை அந்த தாளத்தோடு அவர் ‘சிங்க்’ செய்கிற விதம் சிறப்பாக இருக்கிறது என்பது சாதாரணம்.
பாடலின் முடிவில், தான் கொண்டு வந்த மஞ்சப் பையை, குனிந்து எடுத்துக் கொண்டு கூனிக் குறுகி, அந்த இடத்தை விட்டு அவர் வெளியிருகிற விதம், அதுவரை அந்தப் பாடலில் நிகழ்த்தப்பட்ட ஒட்டுமொத்த உணர்வுகளையும் தொகுத்து சொல்வதுபோல் முடியும்.
இந்தப் படத்தில் வருகிற அண்ணனன் தம்பி – உறவு, பின்னாட்களில் ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்திலும் பயன்படுத்தப்பட்டது.
‘ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி..’ பாடலில் பப்பூன் வேடம். பாடல் இரண்டு மூன்று குளோசப் ஷாட்டுகளைத் தவிர, பெரும்பாலும் மிட் ஷாட், லாங் ஷாட் களாகவே இருக்கும்.
அதுபோன்ற ஷாட்டுகளில் முகபாவனைகள் அவசியமற்றது அல்லது பயனற்றது. அதனால் கை, கால் அசைவுகள் மூலமாக அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் சிறப்பு. குளோசப்பில் சோக முகப் பாவனைகளும், மற்ற ஷாட்டுகளில் காமெடியான உடல் அசைவுகளுமாகச் செய்திருப்பார்.
ஒரு டூப் மூலம் பல்டியடிக்கிற காட்சிகள் போக, பாடலின் இறுதியில் வாழைப்பழத்தோல் வழுக்கிக் கிழே விழுந்தவுடன், நேராக சிவாஜியை மட்டும் வட்டமிட்டு அடிக்கிற ஒளி, அதனுடன் முடிகிற அந்தப் பாடல் மிக நவீனம்.
சிவாஜியின் பாவனைகள் பார்வையாளர்களைப் பரிதாப உணர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.
இவை அந்தப் படத்தின் திறமை சார்ந்தவை. ஆனால், இவை எல்லாவற்றையும் விட, அதில் சொல்லப்படுகிற ஒரு செய்தி தான் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ மீது நான் மரியாதை கொள்வதற்கு முக்கியக் காரணம்.
முதலாளியின் மகளைத் திருமணம் முடிப்பது போன்ற செயற்கையான காட்சிகள் இருந்தாலும், இந்தப் படத்தின் தொழிலாளர் வர்க்கக் கண்ணோட்டம் சிறப்பானது.
ஒரு முதலாளியின் சதியால், நாடகத் தொழில் நசிந்து, கலைஞர்கள் வாய்ப்பின்றி வறுமையில் இருக்கும்போது,
சதி செய்த முதலாளியின் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, மீண்டும் நாடகம் நடத்துவதற்கு நிதி வழங்கி அவர்களின் பசிக்கு உணவு வாங்கித் தரும் காட்சி, மிகச் சிறப்பானது. வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது.
பிறகு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாகப் பட்டினியால் இருக்கும்போது அந்தக் கலைஞன் அவர்களுக்கு நிதி திரட்டுவதற்கு நாடகம் நடத்தி, தன் உயிரையே தியாகம் செய்வான்.
இதற்காகவே ‘ராஜபார்ட் ரங்கதுரை’ தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக என் மனதில் பதிந்து விட்டது.
ஆக, ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு ஒப்பிடுவதே…

கருத்துகள் இல்லை: