வியாழன், 11 டிசம்பர், 2014

ஏழைப்பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு

மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது.
மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்... பணத்தை கண்டு மயங்காத வடிவேலுக்கும் பாராட்டுக்கள்....
நேற்று, அவரது மகன் சுப்ரமணி திருமணம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. நண்பர்களுக்கு அழைப்பு இல்லை; சினிமாக்காரர்கள் ஒருவர் கூட தென்படவில்லை; உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பஜார் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரி, மணப்பெண். அவரது தந்தை வேல்முருகன், பந்தல் வேலை பார்க்கும் சாதாரண கூலித்தொழிலாளி. திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில், கூரை வீட்டில் வசிக்கும் குடும்பம். தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காத வடிவேலு, தன் மகனுக்கு ஏழ்மையான பெண்ணை தேடியுள்ளார். பெண் கூரை வீட்டில் வசிக்க வேண்டும் என்பது. வடிவேலுவின் கட்டாய நிபந்தனை. திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் தான் ஏற்பதாகவும், பெண்ணை மட்டும் அனுப்பி வைக்குமாறும் கூறிய வடிவேலு, மகன் மற்றும் மருமகள் திருப்புவனம் வந்தால், வசிப்பதற்கு, பாக்கியா நகரில், வீடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். வசதி வந்தபின், கடந்த காலத்தை மறப்பவர்களுக்கு, வடிவேலுவின் உயர்ந்த செயல், சிறந்த பாடம் dinamalar.com

கருத்துகள் இல்லை: