விஜய்டிவி விஜய் அவார்ட்ஸ் விருதுகளை கடந்த 8
ஆண்டுகளாக ஆண்டு தோறும் வழங்கி திரைஉலகினரை கவுரவித்து வருகிறது.
இந்நிலையில் 2013 ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விருது கடந்த
சனிக்கிழமை(05,07,2014) சென்னை நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டது. இந்த
நிகழ்ச்சி நேரலையாக விஜய்டிவியில் ஒளிபரப்பானது.
விழாவில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது
வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் இயக்குனர்
ராம்மிடம் தங்கமீன்கள் படம் குறித்து பாராட்டிவிட்டு சில கேள்விகளை
கேட்டார். விருதை வாங்கிக்கொண்டு ராம் சில கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், தங்க மீன்கள் படத்தில் அவருக்கு(ராமுக்கு) மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என அவருக்கு அடிக்கடி போன் செய்துள்ளதாகவும், உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்..
அதற்கு சாதனா எனக்கு தேசிய விருது கொடுத்திருக்காங்க...… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என தன்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டதாக ராம் கூறினார்.
மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒரு முறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்”என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார்.
வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்குஇந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.
இந்நிலையில் இயக்குனர் ராம்மை போன்று பல ரசிகர்கள் விஜய் அவார்ட்ஸ் விருது ஒரு சார்பாக வழங்கப்படுவதவாக குற்றம்சாட்டி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
விருது பெற்றவர்கள் விவரம்
மக்கள் விரும்பும் ஹீரோ (பேவரைட்): விஜய் (தலைவா)
மக்கள் விரும்பும் இயக்குனர் (பேவரைட்): கமலஹாசன் (விஸ்வரூபம்)
சிறந்த நடிகர்: கமலஹாசன் (விஸ்வரூபம்)
சிறந்த நடிகை: நயன்தாரா (ராஜா ராணி)
சிறந்த படம்: தங்க மீன்கள் (இயக்குனர் ராம்)
சிறந்த இயக்குனர்: பாலா (பரதேசி)
சிறந்த புதுமுக இயக்குனர் : அட்லி (ராஜா ராணி)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம் (பல படங்கள்)
சிறந்த வில்லன் : அர்ஜுன் (கடல்)
சிறந்த துணை நடிகர்: பாரதிராஜா (பாண்டியநாடு)
சிறந்த துணை நடிகை: தன்ஷிகா (பரதேசி)
சிறந்த அறிமுக நடிகர்: கவுதம் கார்த்திக் (கடல்)
சிறந்த அறிமுக நடிகை: நஸ்ரியா (ராஜா ராணி)
சிறந்த ஒளிப்பதிவாளர் : ராஜீவ் மேனன் (கடல்)
சிறந்த இசை அமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் (சூது கவ்வும்)
சிறந்த ஒப்பனை கலைஞர்: தசரன் (பரதேசி)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா (பரதேசி)
சிறந்த பின்னணி பாடகர்: யுவன் ஷங்கர் ராஜா (மரியான்)
சிறந்த பின்னணி பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்
சிறந்த பாடல்: எதிர்நீச்சலடி (பாடியவர் அனிருத்)
சிறந்த பாடலாசிரியர் : நா.முத்துகுமார் (பாடல்: தெய்வங்கள் எல்லாம்.... படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா)
சிறந்த வசனகர்த்தா: நவீன் (மூடர்கூடம்)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: நலன் குமாரசாமி (சூது கவ்வும்)
சிறந்த கலை இயக்குனர்-: லால்குடி இளையராஜா (விஸ்வரூபம்)
சிறந்த நடன இயக்குனர்: பிருந்தா (கடல்)
இயக்குனர் ஷங்கர் (செவாலியே சிவாஜி கணேசன் விருது)
சிறப்பு அழைப்பாளராக வந்த ஷாருக்கானுக்கு சிறந்த பொழுதுபோக்காளர் விருது வழங்கப்பட்டது. dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக