கும்பகோணம் : தமிழகத்தில் முதன்முறையாக மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு
மழைக்கால நிவாரண நிதியாக ஆண்டுக்கு ரூ.4,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.பித்தளை, எவர்சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்களின் வரவால்
மண்பாண்டங்களின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்து விட்டது. இந்த தொழிலை
நம்பியிருந்த தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது
குறைவான மண்பாண்ட தொழிலாளர்களே கார்த்திகை விளக்குகள், பொங்கல் பானைகள்,
அடுப்புகள், கோடைக்காலங்களில் குடிநீர் பானைகள் போன்றவற்றை தயாரித்து
வருகின்றனர். மழைக் காலங்களான கார்த்திகை, தை மாதங்களில் மட்டும்தான்
இவர்களுக்கு வேலை இருக்கும்.இந்த காலகட்டத்தில்தான் விளக்குகள், பொங்கல்
பானைகளை உற்பத்தி செய்வார்கள். இந்த மாதங்கள் மழைக்காலமாக இருப்பதால்
இவற்றை போதிய அளவு உற்பத்தி செய்ய முடிவதில்லை. இதனால் அவர்களுக்கு
வருமானம் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு, மண்பாண்டத¢ தொழிலாளர் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா யி4,000த்தை ஓராண்டுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி மண்பாண்டத் தொழிலாளர்களாக நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் குறித்து வருவாய், தொழிலாளர் நலத்துறை, மற்றும் கதர் கிராமத் தொழில¢ துறையினர் இணைந்து களஆய்வு நடத்தி வருகின்றனர். இவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் உண்மையிலேயே மண்பாண்டத் தொழில் செய்து வருகிறார்களா? குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர் என ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மண்பாண்ட தொழிலாளர்களின் வீட்டுக்கு களஅதிகாரிகள் சென்று சான்றிதழ்களை வழங்குவர். இன்னும் ஒரு வாரத்தில் அந்த விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பி நிதி பெற்றுத் தரப்படும்‘ என்றார். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக