திங்கள், 7 ஜூலை, 2014

கர்நாடகாவில் ராஜ்யசபா சீட் 40 கோடி ரூ. ! விஜய மல்லைய , அணில் அம்பானி. M.A.M ராமசாமி எல்லாம் எவ்வளவு கொடுத்தாக ?

பெங்களூர்: மேலவை உறுப்பினர் சீட் கொடுப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமி ஸி40 கோடி பேரம் பேசிய ரகசிய சிடி வெளியாகி இருக்கிறது. கர்நாடக அரசியலில் இது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில மேலவை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. மதசார்பற்ற ஜனதா தள கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்துள்ளனர். கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் முன்னாள் முதல்வரான எச்.டி.குமாரசாமி ஆகியோரிடம் அக்கட்சி நிர்வாகிகள் சீட் கேட்டனர். காப்பரெட் கோடீஸ்வரர்கள் எல்லாம் எப்படியாவது ராஜ்யசபா எம்பீக்கள் ஆவது எப்போதும் நடைபெறுவது தானே ? வீடியோ லீக்கானது மட்டும்தான் புத்சு ! விரைவில் பேசாம இதுக்கு ரேட்டை சட்ட விதியாக்கிட்ட ப்ரோப்ளம் சொல்வ்ட் ! அவிங்களும்   இதுவல வந்து சேவை செய்வைங்க

அதன் ஒரு கட்டமாக விஜாபுரா மாவட்டத்தை சேர்ந்த விஜூகவுடா என்பவர், தனக்கு ஆதரவான சில தலைவர்களை குமாரசாமியிடம் அனுப்பி வைத்து, எம்.எல்.சி. சீட்டை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நடைபெற்ற விவாதம் நேற்று முன்தினம் ஆடியோ சி.டி.யாக வெளியானது. இது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிடியில், விஜூகவுடா பாட்டீல் ஆதரவு தலைவர்களிடம், “சீட் வழங்க நான் தயாராக உள்ளேன். ஆனால் வாக்களிக்க வேண்டிய எம்.எல்.ஏ.க்கள், தலா ஸி1 கோடி கேட்கின்றனர். 40 மாதம் ஆட்சியில் இருந்தபோது பணம் சம்பாதித்த எம்.எல்.ஏ.க்களே தற்போது பணம் கேட்கிறார்கள். இதைவிட மற்றக் கட்சித் தலைவர்களிடம் கூட அவர்கள் பேரம் பேசி வருகின்றனர்“ என்று குமாரசாமி கூறியுள்ளார்.  இவ்வாறு விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது விஜூகவுடா ஆதரவாளர்கள், ரூ.40 கோடி வழங்க முடியாது என்று ஆத்திரத்துடன் கூறியதால், அப்படியானால் ரூ.25 கோடி கொடுங்கள் என்று குமாரசாமி கேட்டார்.
 இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த விஜூகவுடா ஆதரவாளர்கள், வேண்டுமானால் ஸி10 கோடி வழங்குகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியதும் குமாரசாமி, என் மூலமாக பயன் அடைந்தவர்களே மேலவை சீட்டுக்காக பணத்துடன் அலைகின்றனர் என்று கூறியுள்ளார். இந்த விவாதத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் பணம் கேட்கின்றனர் என்பதை பலமுறை குமாரசாமி அழுத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜூகவுடா பாட்டீல் கூறுகையில், “எனக்கு எதிராக சதி நடைபெற்றுள்ளது. சி.டி. வெளியான விவகாரத்தின் எனது மனது பாதித்துள்ளது.
இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பிய நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும். லோக்ஆயுக்தாவில் புகார் செய்வேன்“ என்றார்.
இந்த சிடி. விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது: “நான் உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்றை பேசும் அரசியல்வாதி கிடையாது. தற்போதைய அரசியல் நிலை எங்கே செல்கிறது என்பது குறித்து விவாதம் நடத்தி வருகிறேன். நான் ஒன்றும் பெரிய குற்றத்தை செய்யவில்லை. இது அனைத்து கட்சியிலும் நடப்பதுதான்“ என்றார் குமாரசாமி.dinakaran.com

கருத்துகள் இல்லை: