புதுடெல்லிt;
வறுமைக்கோட்டுக்கு கீழே
வாழ்பவர்களுக்கு நேரடி ரொக்க மானியம் வழங்கப்படும் என பொருளாதார
ஆய்வறிக்கையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
பொருளாதார ஆய்வறிக்கை
பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள், பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி மந்திரி தாக்கல் செய்வது மரபாக உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், மரபுப்படி 2013–14 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை, பாராளுமன்றத்தில் நேற்று அவர் தாக்கல் செய்தார். இதுதான் மத்தியில் புதிதாக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நரேந்திர மோடி அரசின் முதலாவது பொருளாதார ஆய்வறிக்கை ஆகும்.
நேரடி ரொக்க மானியம் இதில் இடம்பெற்றிருக்கிற முக்கிய அம்சங்கள் வருமாறு:–
* மானிய திட்டங்களுக்கான மொத்த பணமும் ஏழைகளுக்கு சென்றுவிடுவதில்லை. 2008–09–ம் ஆண்டுக்கு பின்னர் மானியங்களால் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.காங்கிரஸ் கொண்டு வந்த நல்ல திட்டம் இது ஜெயாவை போல முந்தய ஆட்சி திட்டம் என்று கிடப்பில் போடாமைக்கு நன்றி
எனவே வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மானியங்கள் நேரடியாக ரொக்கமாக வழங்கப்படும். புதிய பயோமெட்ரிக் (கைரேகை பதிவு) தொழில்நுட்பத்தை கொண்டு அடையாளம் கண்டு, மொபைல் போன் வழியாக பணப்பட்டுவாடா செய்யப்படும். உணவுப்பொருட்கள், உரம், சமையல் கியாஸ், மண்எண்ணெய், உரம் போன்றவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
* தலைமை கணக்கு தணிக்கையர் தகவல்படி 2013–14 நிதி ஆண்டில் மானியங்களின் அளவு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 596 கோடி ஆகும்.
பொருளாதார வளர்ச்சி வீதம் * 2007–08 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013–14 நிதி ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு இரு மடங்காகி உள்ளது. அதாவது ரூ.77 ஆயிரத்து 123 கோடி இழப்பு, ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 869 கோடி ஆக உயர்ந்துள்ளது.
* இந்திய பொருளாதாரம் 2014–15 நிதி ஆண்டில் 5.4 முதல் 5.9 சதவீத வளர்ச்சியை எட்டக்கூடும்.
* முதலீடுகளை மேம்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 7–8 சதவீத அளவுக்கு உயரும்.
* 2013–14 நிதி ஆண்டில், வெளி பொருளாதார சூழல் அதிரடியாக மேம்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை நிர்வகிக்கக்கூடிய அளவில் உள்ளது. நிதிப்பற்றாக்குறை குறைந்துள்ளது. பணவீக்கம் கொஞ்சம் மிதமான அளவில் உள்ளது. எனவே பொருளாதார நிலை பெரிய அளவுக்கு ஸ்திரமாகும். வர்த்தக நம்பிக்கையையும், முதலீடுகளையும் புதுப்பிக்க முடியும்.
பணவீக்கம் * 2013–14 நிதி ஆண்டில் உணவு தானிய உற்பத்தி, மூன்றாவது முன்மதிப்பீடுபடி 26 கோடியே 40 லட்சம் டன்களாக இருக்கும். முந்தைய 5 ஆண்டுகளின் சராசரி உணவு தானிய உற்பத்தியை விட இது 2 கோடி டன்கள் அதிகம்.
* 2014–15 நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.1 சதவீத அளவுக்கு கட்டுப்படுத்தப்படும்.
* 2013–14 நிதி ஆண்டில் உணவுப்பொருள் பணவீக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் அதிகபட்சமாக 11.95 சதவீதமாக இருந்திருக்கிறது.
* மொத்த விற்பனை பணவீக்கம் 2014 இறுதியில் மிதமான அளவை எட்டும். சில்லறை பணவீக்கம் மிதமாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
வட்டியை குறைக்க வேண்டும் * பணவீக்கம் குறைகிற நிலையில், இணக்கமான சூழ்நிலையை உருவாக்க ஏற்ற விதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைக்க வேண்டும்.
* தற்போதைய வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக நேரடி வரி சட்டம் தேவைப்படுகிறது. வரி நிர்வாகத்திலும் மாற்றம் தேவை.
* ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
* சந்தையில் தலையிடுகிற வகையில், அரசுக்கு அதிகாரம் அளித்து சட்ட திருத்தங்கள் செய்யப்படும்.
வறுமைக்கோடு வீதம் குறைவு * அடுத்த 5 ஆண்டுகளில் 88 ஆயிரத்து 537 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டம்.
* 2013–14 நிதி ஆண்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி 40 சதவீதமாக சரிந்துள்ளது.
* வறுமைக்கோடு வீதம் 2004–05 நிதி ஆண்டின் 37.2 சதவீதம், இது 2011–12 ஆண்டில் 21.9 சதவீதமாக குறைந்துள்ளது.
* ‘எல் நினோ’ பருவநிலை மாற்றம், பருவ மழை மற்றும் உணவுப்பொருட்கள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் தேவையான உணவு தானியம் இருப்பு இருப்பதால், அபாய மணி அடிக்கிற நிலை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக