புதுமுக
நடிகை பெயர் மாற்றச் சொல்லி இயக்குனர் வற்புறுத்தியும் மாற்ற மறுத்து
அடம்பிடிக்கிறார் ஹீரோயின்.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக
பணிபுரிந்தவர் ரமேஷ் ரங்கசாமி. இவர் இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:பிரபலமான வசனம் என்பதால் மட்டுமல்ல
இப்படத்துக்கு பொருத்தமாகவும் இருந்ததால் இந்த டைட்டில் வைத்தேன்.
விளையாட்டுபிள்ளையாக துள்ளும் ஹீரோவுக்கு அப்பா என்றால் பயம். அவனுக்கு
காதல் உண்டாகிறது. இதில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு என்று நினைத்து அவன்
செய்யும் காரியத்தால் அப்பா, நண்பர்கள் என அனைவரையும் பிரிகிறான்.
ஊரைவிட்டே போகும் ஹீரோ என்ன ஆகிறான் என்பதுதான் கதை.
இர்பான் ஹீரோ.
அருந்ததி நாயர் ஹீரோயின். மலையாள பெண்ணான இவர் இப்படம் மூலம்
அறிமுகமாகிறார். ஏற்கனவே ‘வெளுத்து கட்டு என்ற படத்தில் அருந்ததி என்ற
பெயரில் ஒரு நடிகை நடித்திருக்கிறார். எனவே என் பட நாயகியை பெயர்
மாற்றிக்கொள்ளும்படி கூறினேன். படத்தில் இடம்பெறும் அவரது கதாபாத்திரமான
ஆனந்தி என்ற பெயரை வைத்துகொள்ளுமாறு எடுத்துச் சொன்னேன். ஆனால் அவரோ அப்பா,
அம்மா வைத்த பெயரை மாற்ற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். அவர் பெயரை
மாற்றிப்போட என்னால் முடியும். ஆனால் அவர் சம்மதத்துக்காக
காத்திருக்கிறேன். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். கண்ணன் இசை அமைக்கிறார். இவ்வாறு இயக்குனர்
ரமேஷ் ரங்கசாமி கூறினார். - See more at: tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக