இரவுக்
காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு
ஞான ராஜசேகரனின் 'ராமானுஜன்' படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில
குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ்
விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து வந்தபின் நள்ளிரவுக்கு மேல் கணித
மேதை ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாளைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில்
தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தேன்.
1962ல் ராமானுஜனின் 75வது பிறந்த வருட கொண்டாட்டம் வரை ஜானகி அம்மாளை ( இப்போது வயது 63 ) அரசோ அமைப்புகளோ பெரிதாக கவனிக்கவில்லை. ராமானுஜனுக்கான பென்ஷன் பணம் மாதம் ரூ 50. மெல்ல மெல்ல இது 1994ல் ரூ 500 ஆயிற்று. 1962க்குப் பின் நன்கொடைகள் கணிசமாக வந்தன. இதில் திருவல்லிக்கேணியில் தனக்கென ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே இருந்தார் ஜானகி. நிறைய ஏழை மாணவர்களுக்கு எப்போதும் பண உதவி செய்துவந்திருக்கிறார். தையல் டீச்சர் ஜானகி கணித மேதை ராமானுஜன் அளவுக்கு முக்கியமானவர். தன் கணித மேதமையை உலகம் அங்கீகரித்து உதவும் வரை வறுமையில் வாட நேர்ந்ததால், அடிகக்டி மனச் சோர்வுக்கு ஆளானவர் ராமானுஜன். ஜானகி நேர்மாறாக வாழ்க்கை தனக்கு அளித்த இடையூறுகளை மீறி நம்பிக்கையோடு வறுமையில் செம்மையாக வாழ்ந்து சாதித்தவர்.
நன்றி: ஞாநி ஃபேஸ்புக் பக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக