வெள்ளி, 11 ஜூலை, 2014

மதுரை காமராஜர் பலகலை கழகத்தின் கேவலம் பாரீர் ! கல்யாணியின் டாம்பீகம் ஜெயாவையே வெட்கப்படவைக்கும் !


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பணி நியமனத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அவரது நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, பல்கலைக்கழகத்திற்கு வந்த துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜெயலலிதாவும் துணைவேந்தரும் இருப்பதுபோன்ற பேனர்கள், மெகா போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்ததுடன், அவரது வாகன அணிவகுப்பின்போது சரப்பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. கட்சிக்காரர்கள் திரண்டு வந்தனர்.  பல்கலை நுழைவாயிலில் பூத்தட்டுகளுடன் நிற்வைக்கப்பட்டிருந்த சிறுமியர் மலர்  தூவி வரவேற்க, மேள-தாள வாத்தியங்கள் முழங்கின. துணைமுதல்வர் தனது இருக்கைக்குச் செல்லும்பவரை ஆடம்பர வரவேற்புகள் குறையவேயில்லை. இதனால் ஏற்பட்ட பரபரப்பை பார்த்த மதுரைவாசிகள் தங்கள் ஊருக்கு முதல்வர் வருகை தந்துள்ளாரோ என்று நினைத்து விசாரிக்க, துணைவேந்தருக்குத்தான் இந்த வரவேற்பு என்பது தெரிந்ததும் அசந்துபோயினர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: