ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் குடியிருப்பவர் மீராவள்ளி (45).
ஏர்ரகுண்டலாவை சொந்த ஊராக கொண்ட இவர் பிள்ளைகளின் படிப்புக்காக சொந்த ஊரில் உள்ள வீடு, வயல், டிராக்டர்களை விற்று விட்டு மதனப் பள்ளியில் குடிவந்தார்.
மீராவள்ளி தனது மனைவி அஜராம்பீ (40), மகள்கள் ஆசா (20), யஷ்மிதா (18), ஷர்மிளா (15), மகன் தஸ்தகிரி (14) ஆகியோருடன் கடந்த 1–ந்தேதி கடப்பா மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான கண்டி வந்தார். அங்குள்ள அரசு சுற்றுலா விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
3 நாட்கள் தங்கி இருப்பதாக கூறிய அவர்கள் 3 நாளுக்குரிய வாடகை தொகை, அட்வான்ஸ் தொகை அனைத்தையும் முன் கூட்டியே கட்டி விட்டனர்.
நேற்று மதியம்வரை அறையில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. ஓட்டல் ஊழியர்கள் காலிங் பெல்லை அழுத்தினார்கள். ஆனால் பதில் இல்லை. கதவை தட்ட கை வைத்ததும் கதவு திறந்து கொண்டது.
அறையில் இருந்து பயங்கரமாக பூச்சி மருந்து நெடி வீசியது. உள்ளே 6 பேரும் கட்டில் மற்றும் தரையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.
ஆனால் அறை சுவரில் கருப்பு வண்ணத்தில் ‘‘எங்கள் அறைக்கு சிலர் கும்பலாக வந்து எங்களது வாயில் வலுக்கட்டாயமாக பூச்சி மருந்தை ஊற்றினார்கள். அந்த கும்பலில் பொத்தட்டூரைச் சேர்ந்த ரகுமான், எர்ரகுண்டலாவைச் சேர்ந்த தஸ்தகிரியும் இருந்தனர் என எழுதப்பட்டு இருந்தது.
எனவே 6 பேரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து கண்டிநகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக