சம்பளத்தை
ஏற்றவில்லை. தயாரிப்பாளருக்கு எந்த தொந்தரவும் தருவதில்லை என்றார்
ஸ்ரீதிவ்யா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமானவர்
ஸ்ரீதிவ்யா. ‘ஊதா கலரு ரிப்பன் உனக்கு யார் அப்பன் பாடல் மூலம்
பிரபலமானார். ‘பென்சில், ‘காட்டு மல்லி, ‘ஈட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில்
நடித்து வருகிறார். இவர் தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிவிட்டதாகவும்,
தயாரிப்பாளர்களுக்கு தொல்லை தருவதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து
ஸ்ரீதிவ்யா கூறும்போது,‘என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களில் உண்மை இல்லை.
நான் கடின உழைப்பாளி. என்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு இது
நன்கு தெரியும். தொழில் ரீதியான நடிகையாக எனது வேலையை சரியாக செய்கிறேன்.
எந்தவொரு சமயத்திலும் எந்த தயாரிப்பாளருக்கும் நான் தொல்லை கொடுத்ததில்லை
என்றார். -.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக