புதன், 9 ஜூலை, 2014

தனியார் வசமாகிறது ! 50 ரயில் நிலையங்களில் பராமரிப்பு தனியாரிடம் !

கடந்த ஆண்டு ரயில்வே பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 23,558 கோடி வருவாய்  கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சமூக  கடமைகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில் ரூ.41 ஆயிரம் கோடி செலவில் 3,700 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* கடந்த ஆட்சியின் நிர்வாக குறைபாடு மற்றும் கவர்ச்சி திட்டங்களால் ரயில்வேக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போதுள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ.5  லட்சம் கோடி தேவைப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு மூலமாக ரயில்வேக்கு ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
* ரயில்வேயில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும். எதிர்கால திட்டங்கள் தனியார் துறையின் பங்களிப்புடன்  நிறைவேற்றப்படும்.

* கட்டண உயர்வு குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்யப்படும்.
* அனைத்து ரயில் நிலையங்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனி வசதிகள் செய்து தரப்படும். முக்கிய நகரங்களில் உள்ள ரயில்  நிலையங்களில் நடைமேம்பாலங்களில் எஸ்கலேட்டர் வசதி செய்யப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வு அறைகள் கட்டப்படும்.
* வரும் ஆண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* 50 முக்கிய ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள், தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
* 2001ல் ஒரு பயணிக்கு ஒரு கிமீக்கு 10 பைசாவாக இருந்த இழப்பு, கடந்த ஆண்டு 21 பைசாவாக உயர்ந்துள்ளது.
* 5400 ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* 2014&15ல் ரூ. 1லட்சத்து 64 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த ஆண்டில் 12.9 சதவீதம் வளர்ச்சி அடையும்.
* சுகாதார பணிகளை கண்காணிக்க ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
* வெளிச்சந்தையில் இருந்து கடன் வாங்குவது ரூ.11 ஆயிரம் கோடியாக குறைக்கப்படும்.
* முக்கிய ரயில் நிலையங்களில் உணவு வளாகங்கள் அமைக்கப்படும்.
* தண்டவாளத்தில் ஏற்படும் கோளாறுகளை கண்டறிய அல்ட்ராசோனிக் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்.
தமிழகத்துக்கு 5 ரயில் உள்பட58 புதிய ரயில்கள் அறிவிப்புமத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் 58 புதிய  ரயில்கள் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 ஜன்ச£தாரண் என்ற குறைந்த கட்டண ரயில்கள் விடப்படுகின்றன. 5 சிறப்பு ரயில்கள், 6 ஏசி ரயில்கள், 27  எக்ஸ்பிரஸ், 8 பயணிகள் ரயில்கள், டெல்லியில் 5, மும்பையில் 2 என 7 மின்சார ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளன. 11 ரயில்களின் வழித்தடம்  நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்துக்கு 4 ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: