வியாழன், 10 ஜூலை, 2014

ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக நின்ற தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர அனுமதி தர வேண்டும்

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி கேள்வி பதில் அறிக்கை:நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்  இணைந்து நடத்திய முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் கோரிக்கை மனுவினை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் கொடுத்தது என்னவாயிற்று?தமிழகத்தின் வரலாற்றில் இல்லாதவாறு, வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  அதிமுகவினர் தங்கு தடையின்றி வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் கூட வீடு வீடாகச் சென்று ஆதரவு கேட்கலாம் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார். இது போன்ற ஆதாரபூர்வமான புகார் களை தெரிவித்துத்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் மீது உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்ப தற்கான அனுமதியினை குடியரசுத் தலைவரிடம் கேட்டோம்.
நம்முடைய இந்தக் கருத்தினைப் போலவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி  அனுமதி கேட்டுள்ளார்;  அதுபோலவே பாமக நிறுவனர் 5-7-2014ல் வேலூரில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழகத் தேர்தல் முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரவுள்ளது என்றார்.  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறும் போது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் ஏன் 144 தடை உத்தரவு போடப்பட்டது? எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை. காவல் துறை உதவியுடன் பண விநியோகம் நடைபெற்றதுÓ என்று கூறியிருக்கிறார். எனவே உச்சநீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடர விரைவில் குடியரசுத் தலைவர் அனுமதி வழங்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.

83 தமிழக அதிகாரிகளை அதிரடியாக உச்சநீதிமன்றம் பதவி நீக்கம் செய்திருக்கிறதே?2005ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் வேலைக்காகத் தேர்ந்தெடுத்த 83 பேரை,  தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற புகாரை மையமாக வைத்து, சிலர் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச், 3-4-2011ல் தகுதி நீக்கம் செய்து உத்தர விட் டது. இதைத் தொடர்ந்து  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில்தான், உச்சநீதி மன்றம், 30-6-2014ல் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்திருக்கிறது.தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சுமார் 15 பேர் இப்போது மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ.)வாக இருக்கிறார்கள்.  இவர்களைப் பணி நீக்கம் செய்தால், இவர்கள் கடந்த காலத்தில் பிறப்பித்த உத்தரவுகள் எல்லாம் செல்லாதவையா என்ற கேள்வி எழும்.அதுபோலவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சுமார் 15 பேர் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர்களாக (ஏ.டி.எஸ்.பி.) பணியாற்றுகிறார்கள். இவர்கள் நடத்திய வழக்குகள், வாங்கிக் கொடுத்த தண்டனைகள் செல்லுமா? இவர்கள் 9 ஆண்டுகள் பணி செய்த பிறகு நீக்கம் செய்யப்பட்டால், இவர்களின் எதிர்காலம் என்ன? இவர்கள் இனிமேலும் வேறு பணிகளில் சேர வயது இடம் கொடுக்குமா? மீண்டும் தேர்வாணையக் கழகத் தேர்வுகளில் இவர்கள் பங்கேற்க முடியுமா? இவர்களின் குடும்பங்களின் கதி என்ன?

ஆனால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிட விபத்து பற்றி சிபிஐ விசாரணைதான் வைக்க வேண்டுமென்று உங்களை போலவே தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்த அறிக்கையில், விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரகுபதி ஏற்கனவே பல விசாரணை ஆணையங்களில் நீதிபதியாக இருந்து வருகிறார். எனவே இந்த விபத்து குறித்து உண்மைகள் வெளிவர ஏதுவாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா ஆணையிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.தேமுதிக தலைவர் மாத்திரமல்ல பாமக நிறுவனர் ராமதாசும், ‘அதிமுக ஆட்சியில் அரசு வழக் கறிஞராக இருந்த ரகுபதி, ஏற்கனவே 8 விசாரணைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசியல் சாராத ஓய்வு பெற்ற நீதிபதிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ள நிலையில் அவர்களில் யாரையாவது விசாரணை நீதிபதியாக நியமிக்க வேண்டும்Ó என்று கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் கூறுவதையே  கேட்பதில்லை என்ற முடிவோடு நடைபெறும் இந்த ஆட்சியினர் இந்தக் கருத்தினையாவது கேட்க முன்வருவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை தேசிய மொழிகளாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் எஸ். ராஜமாணிக்கம் தொடுத்த வழக்கு பற்றி?இந்தியா குடியரசான பிறகு, முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இருமொழிப் பயன்பாடு நீடிக்க வேண்டும் என்று தான் அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. அதன் பிறகு படிப்படியாக இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளையும் தேசிய மற்றும் அலுவல் மொழிகளாக மாற்றுவது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.  இந்த நடைமுறையை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதில் நல்ல முடிவு ஏற்பட வேண்டுமென்பது நமது விருப்பமும் ஆகும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
dinakaran.com

கருத்துகள் இல்லை: