சென்னை : தே.மு.தி.க., சார்பில், தலைமை தேர்தல் கமிஷனர் மீது, வழக்கு தொடர
அனுமதிக்க வேண்டும்,'' என, ஜனாதிபதிக்கு அக்கட்சி தலைவர், விஜயகாந்த்
கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடித விவரம்:நடந்து முடிந்த லோக்சபா
தேர்தலுக்கு, இரண்டு நாட்கள் முன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, 144 தடை
உத்தரவு பிறப்பித்தார். அப்போதே, இந்த தடை உத்தரவுக்கு, அரசியல் கட்சிகள்
மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.தீவிரவாதிகள் மற்றும்
நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருக்கின்ற மாநிலங்களில் கூட, 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்படவில்லை. ஆளும்கட்சிக்கு அனுசரணையாகவே, இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க., கருதுகிறது.வாக்காளர்களுக்கு பணம்
மற்றும் இலவச பொருட்களை விநியோகிக்கவும், பல தேர்தல் முறைகேடுகளில்
ஈடுபடவும், அ.தி.மு.க., இதை பயன்படுத்திக் கொண்டது. இண்ணைக்குத்தான் வெறி முறிந்திருக்குப் போல. தேர்தல் முடிந்து இத்தனை
நாளாச்சு இப்பத்தான் 144 ஞாபகதிற்கு வந்ததா? அ தி மு க உடன் கூட்டு
வைக்கும் முன்னரே, இந்த வழக்குகள் முடியும் வரை கூட்டணி என்ற பேச்சு
வார்த்தையே கிடையாது என்று கூறி இருக்கலாமே.
தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என, தமிழக தேர்தல் அதிகாரியே, ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.எனவே, தேவையில்லாமல், 144 தடை உத்தரவு பிறப்பித்த, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் மீதும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீதும், தே.மு.தி.க., சார்பில் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும்.
இதேபோல, முதல்வர் ஜெயலலிதா, வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கு, சென்னை எழும்பூரில் நடந்து வருகிறது.பல்வேறு காரணங்களை கூறி, கோர்ட்டில் ஆஜராகாமல் ஜெயலலிதா, வாய்தா வாங்கி வருகிறார். ஜூன் மாதம் நேரில் ஆஜராகாமல் இருக்க, நீதிபதியிடம் வழக்கறிஞர் மூலம் கேட்டிருக்கிறார். அதற்கு மத்திய அரசு வருமான வரித்துறை வழக்கறிஞர், எதிர்ப்பு தெரிவிக்காததால், ஜெ.,வின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, வருமான வரித் துறை, சமரசத் தீர்வு கண்டால், அதன் விளைவு, பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கை திசை திருப்பி விடும் என, பொதுமக்கள் கருதுகின்றனர்.எனவே, இதை கருத்தில் கொண்டு, வருமான வரித் துறை, இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநிறுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் விஜயகாந்த் குறி dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக