வியாழன், 10 ஜூலை, 2014

தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு

மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்ததையடுத்து பங்குச்சந்தைகள் சற்று சரிந்தன. சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்து, 25372-ல் வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல் தங்கம் விலையும் சற்று அதிகரித்தது. இன்று மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, சவரன் 21 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 22 காரட் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூ.2715-க்கு விற்பனை ஆனது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 59 உயர்ந்து, ரூ.2904-க்கு விற்பனை ஆனது. இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்தது. பார் வெள்ளி கிலோவுக்கு 955 ரூபாய் அதிகரித்து ரூ.46300 என்ற நிலையில் இருந்தது. ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.49.30க்கு விற்பனை செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை: