கடந்த 2012ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலாராடோ மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மரிஜுவானா போதைப்பொருள் விற்பனையை சட்டபூர்வமாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இதனை பயிரிடுவதற்கும், வரி விதிப்பின் மூலம் விற்பனைக்கும் வர்த்தக அனுமதி வழங்கப்பட்டது அமெரிக்காவையே வியப்பில் ஆழ்த்தியது. கொலாராடோவில் இந்த விற்பனை கடந்த ஜனவரி முதல் தேதி துவங்கப்பட்டது. வாஷிங்டன் மாநிலத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அன்று 24 சில்லறை வர்த்தக அனுமதிகள் வழங்கப்பட்டன. இருப்பினும் இந்த விற்பனை உரிமையைப் பெற்ற அனைத்து வியாபாரிகளும் நேற்று விற்பனைக்குத் தயாராக இருக்கவில்லை. போதுமான அளவு உற்பத்தி அங்கு இல்லாத காரணத்தினால் விற்பனையாளர்களிடையே பற்றாக்குறை காணப்பட்டது.
சியாட்டில் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பெல்லிங்ஹாம் நகரில் நேற்று காலை 8 மணிக்கு முதல் விற்பனை துவங்கியது. இது கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய நடவடிக்கை என்று கூறப்படுகின்றது.
மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் இதுபோன்ற கடைகளில் வாங்கும் இந்த போதைப்பொருளின் விலை ஒரு கிராம் 25 டாலர் அல்லது அதற்கும் மேலான விலையை எட்டும் என்று கூறப்பட்டது. இருப்பினும், முறையான அனுமதி பெறாத வெளியிடங்களில் இதுபோன்று இரு மடங்கு விலை கொடுத்து மக்கள் வாங்குகின்றனர் என்றும் உற்பத்தி பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட் maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக