
Report டெஹ்ரான்: மிகவும் அழகாக இருந்த ஒரே குற்றத்திற்காக ஈரானில் ஒரு பெண் கவுன்சிலரின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பேரழகு கொண்டவர்களுக்கு இங்கு வேலை இல்லை என்று அந்தப் பெண்ணுக்கு அதிகாரிகள் காரணம் கூறியுள்ளனராம். இத்தனைக்கும் நகராட்சித் தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் வாங்கியிருந்தார். ஆனால் ஆணாதிக்க அதிகாரிகளால் தற்போது பதவியை தொடர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுஅவரது பெயர் நினா சியகாலி மொராடி என்பதாகும். வயது 27 ஆகிறது. குவாஸ்வின் நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றவர்.இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 10,000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். >ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து, ரிசல்ட்டையும் அறிவிக்க தயாரான நிலையில் திடீரென அவர் தகுதி இழந்து விட்டதாக அறிவித்து விட்டனர். இவ்வளவு அழகு கூடாது… இதற்கு அவரிடம் சொல்லப்பட்ட காரணம், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட பெண்கள் இந்த வேலைக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதாம்.
நகராட்சித் தலைவர் இதுகுறித்து நகராட்சித் தலைவர் கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு கேட் வாக் போகும் மாடல்கள் தேவையில்லை என்றார். ஜூன் 14ல் நடந்த பஞ்சாயத்து இந்தத் தேர்தல் ஜூன்14ம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போதுதான் மொராடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான பின்னணி குறித்த விவரம் வெளியாகியுள்ளது.எதிர்ப்பாளர்களின் கருத்து… >மொராடியை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் கூறுகையில், மொராடி மிகவும் அழகானவர், இளமையானவர் என்பதால்தான் கவர்ச்சிக்கு மயங்கி ஓட்டுப் போட்டு விட்டனர். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று கூறியுள்ளனர். ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக