வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுப்ரீம் கோர்ட்: முல்லை பெரியாறு அணையை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை!

முல்லை பெரியாறு அணையை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் முன் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. தமிழக, கேரள அரசுகள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடி வருகிறார்கள்.  நேற்று முன்தினம் விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறி கேரள அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததை நீதிபதிகள் கண்டித்தனர். அப்போது அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது தவறுதான் என்று கேரள அரசு வக்கீல் ஹரீஸ் சால்வே ஒப்புக்கொண்டார். நேற்று 6வது நாள் விசாரணை நடந்தது. அப்போது கேரள அரசு வக்கீலின் வாதத்தின் போது நீதிபதிகள் இடைமறித்து முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. அதற்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்தினால் எந்தவித பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேரளாவுக்கு உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: