ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு எந்தவொரு அ.தி.மு.க. தொண்டனும் செய்யாத
வகையில் ‘ரத்த சரித்ரா’ படைத்த கராத்தே வீரர் ஹூசைனியின் தியாகத்தை எண்ணிப்
பார்க்காமல், சர்ச்சையை கிளப்புகின்றனராம் ரத்த தான வங்கி அமைப்பினர்.
ரத்த தான வங்கியினருக்கு அ.தி.மு.க. கொள்கைகள் புரியுமா? ‘ரத்தத்தின் ரத்தமே’ என்றால் அர்த்தம் தெரியுமா? அந்த அர்த்தத்தை சிலையாக வடித்திருக்கிறார், உண்மை அ.தி.மு.க.காரரான ஹூசைனி. ரத்தத்தை உறைய வைத்து புரட்சித் தலைவியின் சிலை வடித்திருக்கிறார் அவர்.
ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும், 10-ம் நூற்றாண்டு எகிப்திலும் இப்படி ஓரிருவர் செய்திருக்கிறார். 12-ம் நூற்றாண்டில் மொங்கோலிய அரசர் தெமூ ஜின், எதிரிகளை கொன்று அவர்களது ரத்தத்தை எடுத்து தமது சிலையில் பூச செய்தார். அந்த சிலை, மன்னர் பிறந்த ததல் சும் பகுதியில் இன்னமும் உள்ளது.
அ.தி.மு.க.-வில் ரத்தத்துக்கு மரியாதை செய்தது ஹூசைனிதான்.
இதே ஹூசைனி சில வருடங்களுக்கு முன்பு ரத்த ஓவியங்களை வரைந்து காட்டியிருக்கிறார். அப்போது அவர் நடத்தும் வில் வித்தை பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி கொடுத்த நடமாடும் தெய்வம், நம்ம புரட்சித் தலைவிதான். ஓவியத்துக்கே 50 லட்சம் என்றால், சிலைக்கு எவ்வளவு கிடைக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
ரத்ததான வங்கி அமைப்பினருக்கு என்ன சிக்கல்? உயிர்காக்க பயன்படுத்தும் ரத்தத்தினை இப்படி சிலை வடித்து வீணடித்து விட்டார் என்றும், வில்வித்தை கற்றுக்கொள்ள வந்தவர்களிடம் ரத்தம் எடுத்து, அனுமதியின்றி பதுக்கி வைத்து விட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கூறுகிறார்களாம் அவர்கள். இதற்கெல்லாம் புகார் செய்வதா? ரத்தத்தை உறைய வைத்து சிலைதானே செய்தார்? உலையில் வைத்து குடித்தால்தான் தப்பு.
இதெல்லாம் அந்த கட்சி சமாச்சரம். கட்சி கலாச்சாரம். தடுக்க ரத்ததான வங்கி அமைப்பினருக்கு உரிமை கிடையாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக