ஆதிபகவன் திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்க சினிமா தணிக்கை குழு பணம் கேட்டதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், >சினிமாக்களை
தரம் பிரித்து சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிலாக, பணம் வாங்கிக்கொண்டு
சான்றிதழ் கொடுக்கிறார்கள். பணம் கொடுக்க முடியாது என்பதால், ஆதிபகவன்
திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்கான காட்சிகள் படத்தில்
இல்லை. இந்த சட்டங்கள் எல்லாம் இப்பதான் வந்திருக்கிறதா? இல்லை முன்பே
இருக்கிறதா? படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஏ
சான்றிதழ் கொடுக்க என்ன இருக்கிறது. முத்தக் காட்சி இருக்கா. ஆடை அவிழ்ப்பு
காட்சி இருக்கா. கட்டிப்பிடித்து யாராவது உருண்டாங்களா, கற்பழிப்பு காட்சி
இருக்கா. இந்தப் படத்தை பார்க்கக் கூடாது என்று ஏ சான்றிதழ் அளித்துள்னர்
என்ன மோட்டீவ் என்று எனக்கும் புரியவில்லை. சான்றிதழக்கு ஏற்ப ரேட் உள்ளது
என்றார்கள். ரேட் கொடுத்து சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றேன்.
படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனால் படத்துக்கான பிரமோஷன் வேலைகளை சரியாக செய்யமுடியவில்லை.
ஒட்டுமொத்தத்தில் தணிக்கைக்குழு மாபியா கும்பல் போல் செயல்படுகிறது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக