வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

குமுதம் Gang பத்திரிகைக்குள் குத்து வெட்டு

குமுதம் கம்பெனி குறித்த நடவடிக்கைகளில், இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்ட திருமதி. கோதை, மற்றும் திரு. ஜவஹர் பழனியப்பன் ஆகியோரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். மேலும் பொய்யான வதந்திகளை நம்ப ???? வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன் பாசமுள்ள அன்பு உள்ளங்களுக்கு ,

குமுதம்,
எஸ்.ஏ.பி., மற்றும் பி.வி.பி. ஆகியோரின் தன்னலமற்ற(???) உழைப்பில் விளைந்த  மலர்.குமுதம் ஊழியர்களின் அயராத உழைப்பும் ஆயிரக் கணக்கான விற்பனையாளர்களின் ஒத்துழைப்பும், விளம்பரதாரர்களின் ஆதரவும், வாசகர்களின்(பாமரத்தனம்) ஊக்குவிப்பும்தான் குமுதம் அன்றும் இன்றும் என்றும்நிலைத்து நிற்கக் காரணம்.
திரு. ஜவஹர் பழனியப்பன் இந்தியக் குடியுரிமையை ஒதுக்கிவிட்டு, அமெரிக்க பிரஜையான விபரத்தை மறைத்து குமுதத்தின் பங்குகளை தன் தாயார் திருமதி. கோதை அவர்களுடன் கூட்டு சேர்ந்து சட்டத்துக்குபுறம்பாக வாங்கியிருந்தார்.
இது அந்நிய செலாவணி நடைமுறைப்படுத்தும்சட்டம் மற்றும் அந்நியச் செலாவணி முதலீடு வரையறை சட்ட விதிகளுக்கு (FERA ,FEMA ,ED , RBI ] புறம்பான சட்ட விரோத செயலாகும். இது குறித்துதெரியவந்ததும் அதை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 20.9.2011 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில் திரு. ஜவஹர்பழனியப்பன் அவர்கள் வசம் இருந்த, அவரால் சட்டத்துக்குப் புறம்பாகபெறப்பட்ட பங்குகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுநடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அந்நிய நாட்டு பிரஜையான திரு.ஜவஹர் பழனியப்பன் பத்திரிகை செய்திகளைத் தேர்ந்தெடுத்து பிரசுரம்செய்து வருவது, அச்சகம் மற்றும் பருவ இதழ் பதிவு சட்டத்துக்குபுறம்பானது என்பதால், அவர் பெயர் கௌரவ ஆசிரியர் என்று இதழ்களில்பிரசுரிக்கப்படுவது நீக்கப்பட்டும்,அவர்தலையீடு தடுக்கப்பட்டும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த சட்டப்பூர்வமானநடவடிக்கைகளை ஆட்சேபித்து திரு. ஜவஹர் பழனியப்பன் எந்த சட்டநடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ள வில்லை.

ஆனால் திருமதி. கோதை தனது மகனும் அமெரிக்க பிரஜையுமானதிரு. ஜவஹர் பழனியப்பன் தூண்டுதலின் பேரில் சட்ட நெறிமுறைகளுக்குபுறம்பாக, கம்பெனியையோ அல்லது கம்பெனியின் சேர்மன் மற்றும் நிர்வாகஇயக்குநரையோ தரப்பினராக சேர்க்காமல் தன்னைத்தானே தன்னிச்சையாக நிர்வாக இயக்குநராக பொய்யாக அறிவித்துக் கொண்டு சென்னை மாநகர்உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குதொடர்ந்து 30.9.2011 அன்று நவராத்திரி விடுமுறைக்கு முன்தினம் கம்பெனியை முடக்கும் நோக்கத்துடனும், ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தும் நோக்கத்துடனும் ஒரு இடைக்காலஉத்தரவை பெற்றார். நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இடைக்கால உத்தரவினை நிறுத்தி வைக்க உத்தரவு வாங்கியது. 23.12.2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் திருமதி.கோதை, குமுதத்தையும் அதன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான பா. வரதராசனையும் சேர்க்காமல் வழக்கு தொடர்ந்தது தவறு என்றும் உள்நோக்கம் கொண்டது என்பதையும் சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரு. ஜவஹர் பழனியப்பன், திருமதி. கோதை ஆகியோர் (Crl .OP 24652/2011)என்ற வழக்கு தொடர்ந்து தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரிவிடுத்தவிண்ணப்பத்தில் 16.11.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ்பாதுகாப்பு வழங்க மறுத்து, கம்பெனி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கம்பெனி ஊழியர்களிடனோ, தொழிலாளர்களிடமோ, அலுவலர்களிடமோ எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு நபர்களை அலுவலகத்துக்கு உடன் அழைத்துச்செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தி தீர்ப்பு வழங்கியது.

கம்பெனியின் இயக்குநர்களின் கூட்டம் முறையாக அறிவித்து சட்டப்பூர்வமாக 20.9.2011, 10.10.2011 மற்றும் 2.1.2012 ஆகிய நாட்களில் கூட்டப்பட்டு அதில் திருமதி. கோதை, மற்றும் திரு. ஜவஹர் பழனியப்பன்ஆகியோர் கலந்து கொள்ளாமல் மூன்று கூட்டங்களையும் புறக்கணித்ததால் தங்கள் இயக்குநர் பதவியை சட்டப்படி இழந்துவிட்டார்கள் . சட்டப்படி திருமதி. கோதை, திரு. ஜவஹர் பழனியப்பன் ஆகியோர் இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதைக் கம்பெனி உரிய அரசுநிறுவனங்களுக்கு தெரியப்படுத்திவிட்டது.

இதனால் வாசகர்கள் , ஊழியர்கள் , விற்பனை பிரதிநிதிகள் , விற்பனையாளர்கள் ஆகியோர் கம்பெனி நிர்வாகம் சம்பந்தமாகவும், கம்பெனி நடத்தும் இதழ்களில் வரும் செய்திகள் சம்பந்தமாகவும் வேறு எந்த வகையிலும் கம்பெனி குறித்த நடவடிக்கைகளில், இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்ட திருமதி. கோதை, மற்றும் திரு. ஜவஹர் பழனியப்பன் ஆகியோரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். மேலும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன் .

இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
பா. வரதராசன்,
சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர்,
குமுதம் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட்.

கருத்துகள் இல்லை: