புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (12)
12. கால்களில் விலங்கிடப்பட்டேன்!
சங்கிலி போடுவது என்றதும், என்ன நடக்கப் போகிறது என்பதை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது. எமது வீடுகளில் நாய்களை சங்கிலிகளால் கட்டி வைப்பது நினைவுக்கு வந்தது. அந்தச் சங்கிலயை ‘நாய்ச் சங்கிலி’ என அழைப்பர். நான் சிறு வயதில் விரும்பிப் பார்த்த ‘மனோகரா’ படத்தில், ஒரு தூணில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உணர்ச்சிகரமாகப் பேசிய அடுக்கு வசனங்களும் ஞாபகத்துக்கு வந்தன. மனித சமுதாயம் அடிமை நிலையில் இருந்த காலத்தில், போர்களில் வென்ற ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை நீண்ட சங்கிலிகளில் பிணைத்து வைத்திருப்பர் என்பதை புத்தகங்களில் படித்திருக்கிறேன். பிரித்தானிய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் தம் ‘முக்கோண வர்த்தகம்’ எனப்படும் (ஆபிரிக்காவில் கறுப்பு அடிமைகளை வாங்கிச் சென்று, அவர்களை அமெரிக்காவிலுள்ள பருத்தி பயிரிடும் முதலாளிகளுக்கு விற்றுவிட்டு, அதற்குப் பண்டமாற்றாக பருத்தியை வாங்கி இங்கிலாந்து கொண்டு சென்று, அவற்றை ஆடைகளாக்கிப் பின்னர் அந்த ஆடைகளை இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்று இலாபம் சம்பாதிப்பது) வர்த்தக நடவடிக்கைகளின் போது, தமது ஆபிரிக்க அடிமைகளை கப்பல்களில் ஏற்றுவதற்கு முன்னர் அவர்களை வாங்கும் நாடுகளின் கடற்கரைத் துறைமுகங்களில் நீணட சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்ததையும் நான் படங்களில் பார்த்திருக்கிறேன். (மேலும்) 04.09.11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக