![]() |

![]() |

![]() |
நாமக்கல் அருகே, பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சாட்டையாலும் பிரம்பாலும் கொடூரமாகத் தாக்கி பேயோட்டிய பிராந்தி சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள காதப்பள்ளியைச் சேர்ந்தவர் அனில்குமார் (வயது 42). கடந்த சில ஆண்டுகளாக, மஞ்சநாய்க்கணூரில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அருள்வாக்கு கூறி வந்தார்.
உடல்நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், மகன், மகள் திருமணத்தடை அகல வேண்டுவோர் என அவரிடம் ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு கேட்டு வந்தனர். குறிப்பாக, பேய் பிடித்ததாகக் கருதப்படும் பெண்களுக்குப் பேய் ஓட்டும் பணிகளையும் செய்து வந்தார்.
/tamil.oneindia.com : சென்னை: தமிழகத்தின் முதல்வராக இன்று பதவியேற்ற முக ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்
ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பொய் சொல்ல வேண்டாம்.. புகழ்ச்சி வேண்டாம்.. உண்மை நிலவரத்தை சொல்லுங்கள், முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம் என்று தெரிவித்தார்.
இதனால் திகைத்துப்போன அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உண்மை நிலவரத்தை விவரித்துள்ளார்கள்,
அவர்களிடம் ஆக்ஸிஜன் தேவைகள் குறித்தும், படுக்கை வசதிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், மேல் அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் மிக மோசமாக பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின், முதல் நாளிலேயே பல்வேறு அதிரடியாக விஷயங்களை செய்துள்ளார்.
நக்கீரன் :தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மறுபுறம் நாடுமுழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 197 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 124 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 73 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
![]() |
![]() |
![]() |
திமுக அமைச்சரவை சமூகரீதியாக பட்டியல்
முக ஸ்டாலின் முதல்வர்
(இசைவேளாளர்)
கொங்கு வேளாள கவுண்டர் :(04)
1.சக்கரபாணி , உணவுத்துறை
2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை
3.வெள்ளாக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை
4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை
முக்குலத்தோர் : (04)
1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை
2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை
3.மகேஷ் பொய்யா மொழி , பள்ளிக்கல்வி துறை
4) தங்கம் தென்னரசு , தொழில்துறை
வன்னியர் : (03)
1.துரைமுருகன் , நீர்வளத்துறை
2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை
3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
கம்மவார்நாயுடு : (03)
1.வேலு , பொதுப்பணித்துறை
2.காந்தி , கைத்தறித்துறை
3.சேகர்பாபு , அறநிலையத்துறை
யாதவர் : (02)
1.இராஜகண்ணப்பன் , போக்குவரத்து துறை
puthiyamugam.com : தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக ஆளுநரின் ஒப்புதலுடன் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்த வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.
தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
![]() |
உமாநாத் IAS : ரேபிட் கிட் விலையை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் போது அமைச்சர் விஜயபாஸ்கரை நீங்களே விலையை சொல்லுங்கள் என்று கோர்த்துவிட்டவர்.
அனு ஜார்ஜ் IAS
ஆளுங்கட்சியின் அதிகார மிரட்டலுக்கு அடிபணியமல் அங்கன்வாடி ஊழியர் நியமனங்களில் தகுதி அடிப்படையில் ஊழியர் நியமனம் செய்தவர். அதனாலயே பழிவாங்கப்பட்டவர்
சண்முகம் IAS
எடப்பாடியும் உதயகுமாரும் கொள்ளையடிக்க முயன்ற பாரத் நெட் டெண்டரில் முறைகேடு என கையெழுத்து மறுத்து கோப்பை திருப்பி அனுப்பியவர்
உதயசந்திரன் IAS
• தமிழகத்திற்கே அவமானச்சின்னமாக இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்களை முன்னின்று நடத்தியவர்
• பலநூறு கோடிகள் கல்விக் கடனாக வழங்க ஏற்பாடுசெய்தவர்
• இடஒதுக்கீடு குறித்து சரியான புரிதலை தரும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கியர். மிகச் சரியான தேர்வு
![]() |
கொரோனா நிவாரணமாக குடும்பத்திற்கு 4000 ரூபாய்.
முதல் தவணையாக 2.07 கோடி கார்டுகளுக்கு 2000 ரூபாய்! இம்மாதமே கொடுக்க உத்தரவு!
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செலவுகளே தமிழ்நாடு அரசு ஏற்கும்!.
ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு!
அனைத்து மகளிரும் கட்டணமில்லாத பேருந்தில் பயணிக்கலாம்!.
மக்களின் புகார்களை 100 நாட்களில் தீர்த்துவைக்க, ' உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை.
5 கோப்புகளில் 5 கையொப்பம்.
சொன்னதைச் செய்வோம், செய்வதையே சொல்வோம்.
ஆரம்பமே அட்டகாசம்.
![]() |
![]() |
தினமணி : சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார்.
இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.
அதன்படி, தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார்.
அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்பதவி ஏற்றதும் கலைஞர் , அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
hindutamil.in : டிசம்பர் 2019-ல் கரோனா தலைகாட்ட ஆரம்பித்தது. ஜனவரி 2020-ல் அதன் மரபுக் கட்டமைப்பு அறியப்பட்டது.
அடுத்த 10 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராகிவிட்டன.
இம்மாதிரி உயிர் காக்கும் மருந்துகள் மக்களைச் சென்றடைவதில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டறியப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன.
ஆய்வு வெற்றியடையும்போது நிறுவனங்கள் மருந்தின் கலவையையும் செய்முறையையும் பகிர்ந்துகொள்வதில்லை.
எனவே, மருந்துகள் அதீத விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க முடிவதில்லை. 1995-ல் உலக வணிக அமைப்பு உருவாக்கிய ஒப்பந்தம் இவர்களின் நலனைக் காக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் வணிகம் தொடர்பான சட்டங்கள் (டிரிப்ஸ்) என்பது அந்த ஒப்பந்தத்தின் பெயர்.
டிரிப்ஸ் சட்டத்துக்கு ஆதரவாகச் சொல்லப்படும் வாதம், சிலர் பாடுபட்டு உருவாக்கிய அறிவுசார் சொத்து பகிர்ந்துகொள்ளப்பட்டால், நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்வம் இராது என்பதாகும்.
![]() |
முதல் சலசலப்புக்குக் காரணம், கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் துறை. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படும் செந்தில் பாலாஜி மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்று கசண்டு (மொலாசஸ்) துறைகளை நிர்வகிப்பார் என்று பட்டியல் தெரிவிக்கிறது.
![]() |
![]() |
Shali Mary : சுடலைமாடனின் ஆட்டம் இனிமேல் தான்.
அஞ்சாதே திரைப்படம் கண்டிருக்கிறீர்களா? அந்தத் திரைப்படத்தின் பாணியில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம்
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் ரஞ்சித்ஜெயின் என்பவரது குழந்தைகளான முஸ்கான் - ரித்திக் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் கால்டாக்சி ஓட்டுநர் மோகனசுந்தரமும் அவனது கூட்டாளி மனோகரனும் பாவம் அந்த பிஞ்சுகளைக் கடத்திச்சென்று பொள்ளாச்சி அருகே காட்டுக்குள் PAP கால்வாய்க் கரையோரம் சிறுமியான முஸ்கானைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்றும்,
அவரது தம்பியையும் கொன்றும் கால்வாயில் வீசினர்,
அப்பொழுது கலைஞர் ஆட்சி, அடுத்த நாளே கொலையாளிகளைப் போலீசார் பிடித்தனர், அதற்கடுத்த இரு தினங்களில் அக்குழந்தைகளை கொன்ற பொள்ளாச்சி PAP கால்வாய் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் முக்கியக் குற்றவாளியான மோகனசுந்தரத்தை தப்பி ஓட முயற்சித்த காரணத்திற்காக என்வுண்டர் செய்தனர்.
![]() |
தினத்தந்தி : உத்தரபிரதேசத்தில் மாப்பிள்ளைக்கு 2ம் வாய்ப்பாடு தெரியததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளில் மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் ஊர்வலமாக திருமண மண்டபத்துக்கு வந்தடைந்தார்.
அப்போது மணப்பெண், திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாப்பிள்ளையின் கல்வித் தகுதியை சோதித்து பார்க்க முயன்றுள்ளார்.
அதனால் மாப்பிள்ளையிடம் 2ம் வாய்ப்பாட்டை கூறுமாறு கேட்டார். ஆனால் மணப்பெண்ணின் கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் மாப்பிள்ளை வாய்ப்பாடு கூற திணறியுள்ளார்.
nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங்குக்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (06/05/2021) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82.முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் குறித்து பார்ப்போம்!....
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித் சிங், ஏழுமுறை மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர். முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம்பெற்றிருந்தவர். உணவுத்துறை, உணவு பதப்படுத்துதல் துறை, வணிகத்துறை உள்ளிட்ட துறைகளில் மத்திய அமைச்சராக அஜித் சிங் பணியாற்றியுள்ளார். அஜித் சிங் உத்தரப்பிரதேச அரசியலில் நுழையும் முன் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.