திங்கள், 18 ஜனவரி, 2021

ரஜினியுடன் அடிக்கடி பேசும் ஸ்டாலின்

ரஜினியுடன் அடிக்கடி பேசும் ஸ்டாலின்
minnambalam.com : ரஜினி மக்கள் மன்றத்தின் நான்கு மாவட்டச் செயலாளர்கள் நேற்று (ஜனவரி 17) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.          அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “நாங்கள் திமுகவில் சேரப் போவது பற்றி தலைமையிடம் எடுத்துச் சொன்னோம். அவர்களும் உங்களுக்கு விருப்பமான இயக்கத்தில் இணைந்து பணியாற்ற எந்தத் தடையும் இல்லை என கூறிவிட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று மின்னம்பலத்தில் மக்கள் மன்றத்தினர் விருப்பப்பட்ட கட்சியில் சேர ரஜினி அனுமதி  என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “பல வருடங்களாக ரஜினி மக்கள் மன்றத்துக்காக செலவு செய்து ரஜினியின் கட்சி மூலம் பதவியை அடையலாம் என பல மாவட்ட செயலாளர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு அரசியலுக்கு வர மாட்டேன் என்ற ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்ததால்... வேறு கட்சிகளில் சேர முடிவெடுத்தனர். இதிலும் சிலர் தலைமைக்கு தொடர்புகொண்டு நாங்கள் வேறு கட்சியில் சேரப் போகிறோம் என்று சொல்ல... உங்கள் விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ரஜினியிடம் ஒப்புதல் பெற்று தலைமை வழியாக பதில் வந்துள்ளது”என்று தெரிவித்திருந்தோம்.

அருணாச்சல பிரதேசத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது

maalaimalar : அருணாச்சல பிரதேசத்தில் 100-க்கும் மேற்கொண்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ளது சீனா
செயற்கைக்கோள் படம்
இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு பக்கமும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின் பல கட்டங்களாக பல தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும், சீனா பின்வாங்குவதில் தயக்கம் காட்டியது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இளையராஜா : அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை

nakkeeran : சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக ரெக்கார்டிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி ரெக்கார்டிங் தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இந்நிலையில் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கட்ட முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுத்து காலி செய்யவைத்தனர். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது இளையராஜா மத்திய மாநில அரசுகள் தனக்கு கொடுத்த விருதுகளை திருப்பி கொடுக்கவுள்ளதாக கூறினார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... 

விருதுகளை திருப்பி அனுப்ப இசைஞானி இளையராஜா முடிவு" - தினா பேச்சு...

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :   சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக ரெக்கார்டிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி ரெக்கார்டிங் தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இந்நிலையில் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கட்ட முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுத்து காலி செய்யவைத்தனர். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். 

ஆப்கனில்- உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொலை

dhinamlar : காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நீதிமன்ற வாகனத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த 2 பெண் நீதிபதிகள் துப்பாக்கி ஏந்தியவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தாலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக காபூலில் மிக முக்கிய நபர்களை குறிவைத்து கொல்லும் போக்கை கடைபிடிக்கின்றனர். இது நகரில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிறு காலை ஆப்கன் உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த இரண்டு பெண் நீதிபதிகளை அப்பகுதியில் பதுங்கியிருந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இப்படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....

ஸ்டாலின் மீது சோனியாவிடம் ராகுல் கடும் புகார்!

ஸ்டாலின் மீது சோனியாவிடம் ராகுல் கடும் புகார்!

 minnambalam : திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒவ்வொரு தேர்தலின் போதும் சலசலப்புக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகும். இந்த வகையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியைக் குவித்த திமுக காங்கிரஸ் கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று (ஜனவரி 18) புதுச்சேரி மாநிலத்தில் அம்மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெறுகிறது. புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிடுவது, அதையடுத்து முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை அறிவிப்பது என்ற திட்டப்படி தான் இந்த கூட்டத்தை நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் பல்கலை கழகத்தில் அதிக சிங்கள மாணவர்கள் ....ஒரு ஆய்வு

கு.மதுசுதன் : 08.01.2021 அன்று யாழ் பல்கலைக்கழக தூபி இடிக்கப்பட்டதன் பின் ஏற்பட்ட மாணவர் போராட்டம் உலகம் முழுவதும் வியாபித்ததும் பலகலைக்கழக மானியங்கள் ஆணக்குழுவின் தலைவர் மதிப்பார்ந்த பேராசிரியர் சம்பத் அவர்கள் விடுத்த ஊடக பேட்டியின் சாராம்சத்தில் ஒரு கருத்தினை மீள நினைவூட்டுவது சாலப்பொருத்தமாகும் “யாழ்பாண பல்கலைக்கழகத்தில் தற்போது 1500 சிங்கள மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்” என்ற புள்ளிவிபரத்தினை மேற்கோள்காட்டியிருக்கிறார். இதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம் என யோசிக்காதீர்கள். இங்கு அதிக சிங்கள் சகோதர மாணவர்கள் படிப்பதை அவர் எடுத்தியம்பியிருகிறார். அதற்காக அவர்கள் கல்வி பயில கூடாதோ அல்லது அவர்களை இங்கு பல்கலை தெரிவுக்கு அனுமதிக்க கூடாதோ என்பது வாதமல்ல.
இந்த 1500க்கும் அதிகமான சிங்கள சகோதர மாணவர்கள் எவ்வாறு அள்ளு கொள்ளையாக யாழ் பலகலைக்கழகத்துக்கு தெரிவாகுகிறார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். அதற்கு நாமே முழு பொறுப்பு.
முன்னர் யாழ் பல்கலைகழக “கம்பஸ்” பெடியனாம்”கம்பஸ்” பெட்டயாம் எண்டா இருக்கிற மதிப்பு வேறு. எப்படியாவது கம்பஸ் போயிட்டா சரி. எந்தத்துறை எண்டாலும் கம்பஸ் போனா சரி. அதுதான் யாழ்பாணத்தவர்களின் இலக்கு.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

500 பக்க அர்னாப் கோஸ்வாமி லீக்ஸ் ! புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த போது பாஜகவினர் ஆனந்த கூத்தாடினார்கள்

வாட்ஸ் பகிர்வு : புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த போது நாடே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் நரேந்திர மோடி உட்பட அனைத்து பா.ஜ.க சங்கிகளும் ஆனந்த கூத்தாடினார்கள். அதை எப்படி ஆளும் பா.ஜ.க வுக்கு ஆதரவு பிரச்சாரமாக பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டார்கள். அப்படி கொண்டாட்டம் போட்ட தேச பக்த பாஜக சங்கிகளில் அர்னாப் கோஸ்வாமி மட்டும் இப்போது ஆதாரபூர்வமாக அம்பலப்பட்டு நிற்கிறார்.                              40 ராணுவ வீரர்கள் இறந்த புல்வாமா தாக்குதல்:- பிப்ரவரி 14, 2019.. அதற்கு பதிலடி கொடுப்பதாக இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதல்:- பிப்ரவரி 26, 2019.. மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே 2019 ல் நடத்தப்பட்டு அதில் பாஜக வென்றது!!! 500 பக்கங்கள் கொண்ட அர்னாப் கோஸ்வாமியின் வாட்சப் உரையாடல்களில் முக்கியமா கவனிக்க வேண்டியது புல்வாமாவில் நடந்த தாக்குதலில் நாற்பது ராணுவ வீரர்கள் இறந்ததைப் பற்றி அவன் பேசியதுதான்!!! 

Image may contain: 1 person, text that says 'M அர்நாப்பின் வாட்ஸ்அப் அரட்டை2 முக்கிய விஷயங்களை நிரூபிக்கிறது. ) பால்கோட் தாக்குதல் மோடி பிம்பத்தை உயர்த்த நன்கு திட்டமிடப்பட்ட தேர்தல் பிரச்சார திட்டம். 2) புல்வாமாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடக்கப்போகிறது என்பதை அரசாங்கம் முன்பே அறிந்திருந்தது. ஆனால் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் ஜெயிப்பதுதான் குறிக்கோள்.'(இந்த தாக்குதல் எனக்கான மிகப்பெரிய வெற்றியாக இருக்கப் போகிறது) என்கிறான்.. அதைத் தொடர்ந்து பால்கோட் மீதான தாக்குதல் நடப்பதற்க்கு முன்பாகவே இவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதைவைத்து பாஜகவிற்கு ஆதரவாக தனது சேனலில் பிரச்சாரம் செய்யவும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளான்..     

பெண் உழவர்களைப் புறக்கணிக்காதீர்... தமிழச்சி தங்கபாண்டியன்

Image may contain: one or more people, tree, grass, sky, outdoor and nature
தமிழச்சி தங்கபாண்டியன் ~ நிசப்தம்
தி இந்து - தமிழச்சி தங்கபாண்டியன் - தமிழாக்கம்ச. கோபாலகிருஷ்ணன் : புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு முறை இப்படிச் சொன்னார்: “பெண்கள்தாம் முதன்முதலில் பயிர்களை வளர்த்து அதன் மூலம் கலையும் அறிவியலும் இணைந்த உழவைத் தொடங்கிவைத்ததாகச் சில வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். ஆண்கள் உணவைத் தேடி வேட்டையாட வெளியே சென்றபோது பெண்கள்தாம் அவர்கள் வசித்த பகுதிகளில் வளர்ந்த செடிகளின் விதைகளைச் சேகரித்து உணவு, வீட்டு விலங்குகளுக்கான இரை, தீவனம், நார்கள், எரிபொருள் ஆகியவற்றைப் பெறும் நோக்கில் அவற்றைப் பயிரிடத் தொடங்கினர்.” தவறான கண்ணோட்டம் இந்தியாவில் வேளாண்மையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆண்களை மட்டுமே உழவர்களாகக் கருதுகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. வேளாண்மைக் கணக் கெடுப்புத் தரவுகளின்படி கிராமப் புறங்களில் வசிக்கும் பெண்களில் 73.2 சதவீதத்தினர் உழவில் ஈடுபடுகிறார் கள். ஆனால், 12.8 சதவீதப் பெண்கள் மட்டுமே நிலவுடையமையாளர்களாக உள்ளனர். பண்பாட்டு, சமூகவியல், மதவாத சக்திகளின் அழுத்தத்தால் பெண்களுக்குத் தொன்றுதொட்டு நில வுடைமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. உழவு என்பது ஆண்களுக்கான தொழில் என்கிற தவறான கண்ணோட் டம்தான் இதற்கு ஆணிவேர்.

முதலாளித்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான “இந்துத்துவா அதிர்ச்சி வைத்தியம்”


madrasreview.com : சாதி பார்ப்பனிய கட்டமைப்பின் அடிப்படையிலான சமூகப் பொருளாதார படிநிலையுடன் புதிய தாராளமயக் கொள்கை ஒன்றிணைந்துள்ளது. இதுவே ‘இந்துத்துவா’ அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தது. 1980-களில் இருந்து புதிய தாராளமயத்தின் மீள் எழுச்சி வெகுஜன மக்களை மேலும் ஓரங்கட்டுவதற்கும், இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் மீதான முதலாளிகளின் பிடியை பலப்படுத்துவதற்கும் வழிவகுத்ததுள்ளது.        சாதிய அடிப்படையிலான இந்திய சமூகப் பிரிவினையை ஆதரித்து ஒரு நிலையான சுரண்டல் கட்டமைப்பை இயல்பாக்க முயற்சிக்கிறது முதலாளித்துவம்.  இந்த போக்கு ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அரசியலுக்கு ஒரு வளமான களத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது.  நுகர்வோர் மீதான அதிர்ச்சி வைத்தியம்..

புதிய தாராளமய சந்தைகளின் எழுச்சி இந்திய நுகர்வு கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மாற்றியமைத்துள்ளது. இந்திய நுகர்வோரை  ஒற்றை கலாச்சாரத்திற்குள் அடைக்க வழிவகுக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நுகர்வு கலாச்சாரம் உள்ளூர் உற்பத்தியாளர்களையும், உள்ளூர் உற்பத்தியையும் பாதுகாத்து வந்தது. 

மக்கள் இதயங்களில் எம்ஜிஆர் வாழ்கிறார்! பிரதமர் மோடி புகழாரம் Tweet

எம்ஜிஆர், பிரதமர்மோடி, மக்கள், இதயங்கள்,நரேந்திர மோடி, புகழாரம்,

Narendra Modi : பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்

dhinamalar : புதுடில்லி: எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கும், சிலைக்கும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமாவரத்தில், எம்ஜிஆர் சிலைக்கு, கமல் மாலை அணிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்ட பதிவு<

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

maalaimalar: ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.  ராமநாதபுரம்:

கொரோனா நோய்க்கு தடுப்பூசி சோதனை முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். கொரோனா வார்டு தனி அதிகாரி டாக்டர் மலையரசு, மருத்துவ துணை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

புதுச்சேரியில் வருங்கால முதல்வர் ஜெகத்ரட்சகன்தான் என்ற செய்திகள் காட்டுத் தீயாக பரவியுள்ளது.

minnambalam :புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறது திமுக தலைமை. அதற்கான பிரம்மாண்டமான செயல் வீரகள் கூட்டம் நாளை (ஜனவரி 18) புதுச்சேரியில் கூடுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்து முதல்வரானார் நாராயணசாமி. அவர் மீது சொந்தக் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் முதல்வர் நாராயணசாமி மீது கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.     இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த புதுச்சேரி திமுக நிர்வாகிகள், “காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்களால் பிளவுபட்டு கிடக்கிறது. காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால், அது திமுகவையும் கடுமையாக பாதிக்கும்”என்று கூறியுள்ளனர். இதையடுத்துதான் திமுக புதுச்சேரியில் தனித்தே போட்டியிடுவது என்றும்,வன்னியர் சமுதாயப் பிரமுகரான அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகனை புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்தார் ஸ்டாலின்.

இந்தோனேசியா நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!

 

dhinakaran :ஜகார்தா : இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து தற்போதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், மீட்பு பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நார்வேயில் பைசர் தடுப்பூசி போட்டவர்கள் 23 பேர் உயிரிழப்பு

latest tamil news

dhnalamalar :ஒஸ்லோ: நார்வே நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர். இதில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.   ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதியில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிர்ச்சி சம்பவமாக நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

ராகுலின் அடுத்த தமிழகப் பயணத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்குமா?

ராகுலின் அடுத்த தமிழகப் பயணத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்குமா?

minnambalam :காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தமிழகத்துக்கு வருகிறார்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ராகுல் காந்தி. இதற்காக தனி விமானத்தில் மதுரை வந்த அவர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, கிராமத்துப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உடனடியாக மதுரையில் இருந்து டெல்லி திரும்பிவிட்டார்.   திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி. சென்ற முறை போல் அல்லாது சுருக்கமான பயணமாக இல்லாமல் மூன்று நாட்கள் பயணமாக கோவைக்கு வருகிறார்.

திராவிட இயக்கம் மீட்டு வந்த தமிழகத்தை மீண்டும் ஆரிய ஆதிக்கத்திடம் அடகு வைத்தவர் எம்ஜியார் ..

Image may contain: text that says 'அடுத்த ஆண்டு முதல் கல்வி வேàா வாய்ப்புக்களி உயர் ஜாதி ஏழைகளுக்கும் க். ஏழைகளு விகிதாச்சாரமுறை தமிழக முதல்வர் புரட்சித்தவர் அறிவிப்பு y'

திரு.ஜேப்பியார் சொன்ன விடயம் ஒன்றே போதும் எம்ஜிஆர் என்னிடம் திரு.சோபன்பாபு கஸ்டடியில் இருக்கிறார் அவரை அழைத்துவரவேண்டுமென பணித்தார் நான் தான் அவரை மிரட்டி அழைத்து ஒரு இரவு என்னோடு வைத்திருந்துவிட்டு பிறகு பொன்மன செம்மலிடம் ..? ஒப்படைத்தேன் என வெளிப்படையாகவே சொன்னார் ஜெயலலிதாவை குடும்ப வாழ்விற்குள் செல்லவிடாமல் அழுத்தம் தந்து கடைசிவரை ஜெயித்தவர் எம்ஜிஆர் .. 

எம்ஜிஆர் பிறந்த தினம்.. ஜனவரி17.. .. நண்பர் கேட்டார் உங்கள் தலைவரின் நண்பரைப் பற்றி ஏன் எழுதவில்லை .. எம்ஜிஆரை நல்ல கலைஞனாகவோ அல்லது சிறந்த அரசியல் ஆளுமையாகவோ என்னால் கருத முடியவில்லை ..சினிமா எனும் நிழற்கூடம் கற்பித்திருந்த மதிமயக்கும் மாயவலை என்போன்ற இளைஞர்களை வெகுவாக வழிகெடுத்ததென்பது உண்மை ..கவர்ச்சியும் அழகும் நிஜமென்று நம்பியதன் விளைவு அரசியலில் மிக பெரிய கேட்டை தமிழகம் கண்டது அதன் தொடர்ச்சியை இப்போதும் அனுபவிக்கிறோம்,.. .. இன்றைய தினம் அவரை புகழ்ந்து போலித்தனமாக எழுத இயலவில்லை.. இன்றைய தமிழர்களின் சங்கடங்களுக்கு காரணியாக இருந்தவர் எந்த தொலைநோக்குமில்லாது ..மனிதர்களை ஏழைகளாக வைத்திருக்கவேண்டுமென்று நினைத்தவர்.. சுயசிந்தனையற்றவர்களாக சினிமாத்தனத்திலேயே தமிழ்மக்களை மாயவலையிலேயே வைத்திருந்தவர்..

காதல் திருமணம் செய்ததால் 2.50 லட்சம் அபராதம்! அதிமுகையினர் கட்டப்பஞ்சாயத்து .. வாணியம்பாடி அருகே

No photo description available.
பாலகணேசன் அருணாசலம் : · இந்தியாவில் இருக்கக்கூடிய மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று சாதிய பிரச்ச னை. இந்த பிரச்சனையால் சக மனிதன் தனக்கு தேவையான அடிப்படை உரிமை யைகூட பெறுவதில் பெரும் சிக்கல் என்பது நிலவி வருகிறது.
குறிப்பாக திருமண வயதை அடைந்தவர்கள் தனக்குப் பிடித்த மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்வதில் மிகப்பெரிய இடைஞ்சலாக இந்திய சமூகம் இருக்கிறது.சமூகத்தை மீறி பிற சாதியினரோடு காதல் திருமணம் செய்து கொண்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல், குடும் பத்தில் இருந்து நீக்கி விடுதல், ஆணவக் கொலை உள்ளிட்ட பல்வேறு இன்னல் களை திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் சந்திக்கின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் ஜெயப்பிரியா ஆகியோர் காதல் திருமணம் செய்ததால் ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் நடந்த கட்டப்பஞ்சாயத் தில் 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அபராதத்தை செலுத்தாததால் காதல் ஜோடியை ஊரை விட்டு துரத்திய அதிமுகவினர் உள்ளிட்ட பஞ்சாயத்தார் பெண்ணின் தந்தையை விரட்டி விரட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

புதுச்சேரியில் திமுக தனித்து போட்டி? முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்? நாளை மறுநாள் முடிவு அறிவிப்பு?

Mathivanan Maran - tamil.oneindia.com : புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக தனித்து போட்டியிடக் கூடும் என்றும் திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுவை யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக அணியில் அதிகபட்சம் 25 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்புள்ளது. புதுவை காங். எதிர்காலம்? அதேநேரத்தில் புதுவையில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருக்கிறது. சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுவையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

40 ராணுவ வீரர்கள் உயிரை பறித்த புல்வாமா தாக்குதல் பாஜக வெற்றிக்காக அரங்கேற்றப்பட்டது? அர்னாப் கோஸ்வாமின் ஆடியோ லீக் Arnab Goswami’s Explosive Whatsapp ‘leak’

Image may contain: 1 person, text

Kavitha Gurunathan  TRP ஊழல் புகழ் அர்னாப் கோஸ்வாமி யின் 500 பக்க வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரத்தை மும்பை போலீஸ் ரிலீஸ் செய்துள்ளது. இந்த வாட்ஸ்அப் உரையாடல்களால் பாஜக மற்றும் அர்னாபின் தேச பக்தி முகமூடி கிழிந்து தொங்குகிறது... பாலகோட் பாகிஸ்தான் தாக்குதல் சென்ற தேர்தலை எப்படி மாற்றி அமைத்தது என்று அனைவரும் அறிவோம். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அர்னாப்க்கு அது தெரிந்து அவர் அது பற்றிய தகவல்களைப் பரிமாறி உள்ளார்.
'இதன் மூலம் பா.ஜ.க தேர்தலை இலகுவாக வெல்லும், அந்தத் தாக்குதலை உடனடியாக ஊதிப் பரப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் எழுதி இருக்கிறார்.'
40 ராணுவ வீரர்கள் உயிரைப் பறித்த புல்வாமா தாக்குதலை மோடிக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போவதாக கூறுகிறான்..

யாழ் மருத்துவ மனையில் சிங்கள நர்ஸுகளே அதிகம்? ஏன்?

திடீர் பணிப்புறக்கணிப்பில் யாழ் மருத்துவமனை தாதியர்கள்! - Sooriyan FM News  - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka

கு.மதுசுதன் : யாழ்பாண மருத்துவ மனைகளில்  அதிகமாக பணியாற்றும் நர்ஸுகள் பெரும்பாலும்  சிங்களவர்களே உள்ளார்கள் ஏன்?    நாம் நேர்ஸ் ஆவதா? என்ற யாழ்பாணத்தவர்களின் ஒரு செயற்கை மிதவாத நினைப்பு. நேர்சிங் படிப்பதற்கு பதில் நாம் பிறைவேற் கோர்ஸ் படிப்போம் என்ற முடிவுகள்.

நேர்சிங் டிப்ளோமாவுக்கு அப்ளை பண்ண முன்னர் பயோ படித்தவர்களே ஏலுமாக இருந்தது எனினும் தாதியர் குறைபாடுகளினால் கணித துறை மாணவர்களையும் உள்ளீர்தார்கள். அதற்கும் அசையவில்லை எம்மவர்கள். பிறகு ஆர்ட்ஸ் படித்தவர்களும் அப்ளை பண்ணலாம் என்றார்கள் அதற்கும் நம் தமிழ் மாணவர்கள் மசியவே இல்லை. இப்போது ஓ .எல் ரிசல்ஸோடு எடுக்கிறார்கள்.
இந்த சீத்துவத்தில் சிங்கள தாதியினர் மருத்துவ சேவைக்காக நியமிக்கபடாமல் என்ன செய்வது. இன்று ஆசுப்பதிரிகளில் அவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
பிறகு சொல்வது அரசு சிங்களவர்களினை நியமிக்கிறது என்று.
கொஞ்சம் எம்மை நாம் பரிசீலனை செய்யலாமே!
எமது மாணவர்கள் தம் எதிர்கால இவ் பொருளாதாரம் தரும் கோர்ஸ்களை தேர்ந்தெடுக்காமல் தவிர்த்து கண்துடைப்புக்கு ஏதோ ஒரு கோர்ஸ் படிப்பது புலம் பெயர் பணத்தினாலேயாகும். சில புலம்பெயர் உறவுகள் வாயளவில் உரிமை பேசாமல் இவ்விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதை விடுவோம் அடுத்த ஒன்று

சனி, 16 ஜனவரி, 2021

பூமி பட விமர்சனம்! முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை கும்பலின் கூத்து


Hema Sankar 
:   தற்சார்பு, இயற்கை விவசாயம், லட்சத்தில் சம்பாதிக்கலாம், ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம், படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லனு சொல்லி எத்தன பேர் குடிய கெடுத்துற்கானுங்கனு தெரியல.
இந்த நாம் தமிழர், முன்னோர் ஒன்றும் முட்டாள் இல்லை கும்பல் , இயற்கை மருத்துவம்னு சொல்ற ஹீலர் கோஷ்டி, வாட்சப் மெசேஜ்ல வரும் அத்தனையும் உண்மைனு நம்ப வெக்கற கூட்டம் ,
இது எல்லாமே தமிழ் நாட்டுல கடந்த சில ஆண்டுகளா பரவிட்டே இருக்காங்க.
இவங்க சொல்ற எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிச்சா ஒன்னு மட்டும் புரியும் ‘ கல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்னு’ பிள்ளைகள் மனசுல எங்கயோ பதிய வெக்கறாங்க.
கல்வியால் வர சமூக மற்றும் அறிவியல் மாற்றத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ, தரமான வாழ்வியலையோ , பகுத்தறிவு சிந்தனையோ,  நமக்கு துளியும் எழக்கூடாதுனு தெளிவா இருக்காங்க.
தமிழ் குடினு சொல்லி சாதிய கண்டறிஞ்சி , நமக்கே தெரியாம கொம்பு சீவி விட்றவங்களும் இவங்க தான்.
முன்பை விட இன்னும் ஆக்கப்பூர்வமா இவங்கள விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயமும், தேவையும் இருக்கு.
சங்கிகளும், தமிழ் தம்பிகளும் ஒன்னு.they are the real threat for our inclusive social development.

நாடு முழுவதும் இன்று 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

dhinakaran : டெல்லி: நாடு முழுவதும் முதல் நாளில் 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 16,963 பேருக்கும், பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நம்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர் முக்கிய கட்சியில உச்ச பதவிக்கு வந்திருக்கிறது சந்தோஷம்! (ராமதாஸ் to துரைமுருகன்)

minnambalam : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 16) காலை உடல்நிலை சரியில்லாமல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட ஒரு காயம் அவரை கடந்த சில நாட்களாக வேதனைப்படுத்தி வந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் துரைமுருகனை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசினார்கள்..."வெளி மாவட்டத்தில் இருந்து அவரிடம் பொங்கல் வாழ்த்து பெறுவதற்காக சென்றிருந்த எங்களை... திமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளராக இருந்தபோதும் அமரவைத்து ஆசுவாசமாக அன்பொழுகப் பேசினார். அப்போதுதான், கடந்த சில நாட்களாகவே துரைமுருகனுக்கு காலில் ஏற்பட்ட வலி மட்டுமல்ல மனதில் ஏற்ட்ட ஒரு வலியும் எங்களுக்குத் தெரிந்தது.

அண்ணா காலத்தில் தனக்கு ஏற்பட்ட கட்சி அனுபவங்களில் இருந்து தொடங்கி தற்போதைய நிலைமை வரை விவரித்தார். ஒரு கட்டத்தில்... ‘திமுக கூட்டணியில் பாமகவை கொண்டுவந்தால், வெற்றி வாய்ப்பு மென்மேலும் உறுதியாகும். இது எனது அபிப்பிராயம். ஆனால் தலைவரிடம் இதைத் தெரிவித்தும் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.

அதிமுக- அமமுக இணைப்பு: குருமூர்த்திக்கு ஜெயக்குமார் .. கங்கை. சாக்கடை என்று சொல்லியிருப்பது அறிவிலி

அதிமுக- அமமுக இணைப்பு: குருமூர்த்திக்கு ஜெயக்குமார் பதில்
minnambalam : பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியரான குருமூர்த்தி, “வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த சசிகலாவும், அதிமுகவும் இணைய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

“எரிந்துகொண்டிருக்கும் வீட்டை அணைப்பதற்கு கங்கை நீரை தேடிக் கொண்டிருக்காமல் கையில் கிடைக்கும் சாக்கடை நீராக இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”என்று அவ்விழாவில் பேசியிருக்கிறார் குருமூர்த்தி.    ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வத்தை தானே தர்மயுத்தம் செய்யத் தூண்டியதாக கூறியவர் குருமூர்த்தி. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெல்ல வேண்டுமானால் அதிமுகவும், அமமுகவும் சேர வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் அரசியல் அரங்கில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.    இந்நிலையில் இதுகுறித்து ஜனவரி 15 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருக்கிறார்.