ஞாயிறு, 17 ஜனவரி, 2021

யாழ் மருத்துவ மனையில் சிங்கள நர்ஸுகளே அதிகம்? ஏன்?

திடீர் பணிப்புறக்கணிப்பில் யாழ் மருத்துவமனை தாதியர்கள்! - Sooriyan FM News  - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka

கு.மதுசுதன் : யாழ்பாண மருத்துவ மனைகளில்  அதிகமாக பணியாற்றும் நர்ஸுகள் பெரும்பாலும்  சிங்களவர்களே உள்ளார்கள் ஏன்?    நாம் நேர்ஸ் ஆவதா? என்ற யாழ்பாணத்தவர்களின் ஒரு செயற்கை மிதவாத நினைப்பு. நேர்சிங் படிப்பதற்கு பதில் நாம் பிறைவேற் கோர்ஸ் படிப்போம் என்ற முடிவுகள்.

நேர்சிங் டிப்ளோமாவுக்கு அப்ளை பண்ண முன்னர் பயோ படித்தவர்களே ஏலுமாக இருந்தது எனினும் தாதியர் குறைபாடுகளினால் கணித துறை மாணவர்களையும் உள்ளீர்தார்கள். அதற்கும் அசையவில்லை எம்மவர்கள். பிறகு ஆர்ட்ஸ் படித்தவர்களும் அப்ளை பண்ணலாம் என்றார்கள் அதற்கும் நம் தமிழ் மாணவர்கள் மசியவே இல்லை. இப்போது ஓ .எல் ரிசல்ஸோடு எடுக்கிறார்கள்.
இந்த சீத்துவத்தில் சிங்கள தாதியினர் மருத்துவ சேவைக்காக நியமிக்கபடாமல் என்ன செய்வது. இன்று ஆசுப்பதிரிகளில் அவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
பிறகு சொல்வது அரசு சிங்களவர்களினை நியமிக்கிறது என்று.
கொஞ்சம் எம்மை நாம் பரிசீலனை செய்யலாமே!
எமது மாணவர்கள் தம் எதிர்கால இவ் பொருளாதாரம் தரும் கோர்ஸ்களை தேர்ந்தெடுக்காமல் தவிர்த்து கண்துடைப்புக்கு ஏதோ ஒரு கோர்ஸ் படிப்பது புலம் பெயர் பணத்தினாலேயாகும். சில புலம்பெயர் உறவுகள் வாயளவில் உரிமை பேசாமல் இவ்விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதை விடுவோம் அடுத்த ஒன்று
அன்று தொடக்கம் இன்று வரை பரம்பரை பரம்பரையாக கொலசிப் பாஸ் பண்ணுற பிள்ளையும், ஓ .எல் 9ஏ எடுக்கிற பிள்ளையும், ஏ .எல் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களினை ஊடகங்கள் பேட்டி கண்டால் "நான் டொக்டராக வர வேண்டும்" " நான் இஞ்சினியராக வர வேண்டும்" என்ற தாத்தா கால மனப்பாடங்கள் இன்றும் மறையவில்லை.
மாறாக நவீன உலகில் "ஸ்பேஸ் சயன்ஸ்",
"ஏரோ டைனமிக்" ,மைக்கிறோ எஞசினியரிங்" " டி .என் .ஏ எஞ்சினியரிங்" போன்ற துறைகளில் பெரியவனாக வர வேண்டும் என எந்த மாணவரும் இலட்சியமாக கூறுவதில்லை. ஏன் சிறந்த தலைவனாக வர வேண்டும் என்று கூட ஒரு மாணவனும் கூறுவதில்லை. காலம் மாறினாலும் நம் கோலங்கள் மாறவில்லை. பெற்றோர் இதுபற்றி சிதித்து மாணவர்களினை கனவு காண வைப்பதுமில்லை. பழைய சித்தாந்தப்படி மெடிசின்,இஞசினீரிங்,சட்டம் படிப்பிக்கவே பெரும் பண செலவுடன் வெளிநாடு அனுப்புகின்றனர்.
ஏரோ டைனமிக், ஏரோ எஞ்ஞினீரிங் போன்ற துறைகளில் யாரும் பட்டமோ புலமையோ கொள்ளாது பலாலி சர்வதேச விமான நிலையம் வந்த போது அதில் வேலையினை நிரப்ப அத் துறையில் தேர்ந்த சிங்களவர்களினை தானே நிரப்பலாம். பின்னர் சிங்களவர்களினை நிரப்பிவிட்டார்கள் என கூவுவது.
இவை அனைத்தும் வேடிக்கையே!!
எம் பிரதேசத்தில் கண்ணுக்கு தெரிந்தே
சிங்கள பெரும்பாண்மை இன விகிதாசார பரம்பலை பல துறைகளில் நாமே ஏற்படுத்த அனுமதித்துவிட்டு ஐயோ ஆக்கிரமித்துவிட்டானே என கூவுவது அநியாயம்.
வடக்கின் முக்கிய கல்வி துறையிலேயே சிங்களவர்களினை ஊடுறுவ விட்டது யார்? அதனூடாக அதிக வேலை வெற்றிடங்களினை அவர்கள் நிரப்ப காரணமாக அமைந்தது நாமா அவர்களா?
நாம் நீண்ட இன விடுதலை பயணத்தில் நீடித்த கண்ணோட்டங்கள் வகிபங்குகள் வகிக்காது சுயநல யாழ்பாணத்தவர்களாக எப்போது மாறினோமோ அப்போதே சத்தமற்ற இன அழிப்புக்கு நம்மை நாமே உட்படுத்தியிருக்கிறோம்.
இவை கண்னுக்கு புலப்படும் காணி அபகரிப்பு, விகாரை அமைப்பு , நினைவு சின்ன அழிப்பினை விட ஆபத்தானவை.
இப்போது சொல்லுங்கள் யார் இனழிப்பாளர்கள்!!!
இனியாவது சமூக அக்கறையோடு எழுந்து பணியாற்றுங்கள்.
(இது குறைகூறும் பதிவல்ல விழிப்புணர்வு பதிவு)

கருத்துகள் இல்லை: